லைஃப்ஸ்டைல்

கடுக்காயில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்

சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த மருத்துவப் பொருட்களில் கடுக்காயும் ஒன்று. கடுக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

S Kavitha

தற்போதைய கால கட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

அப்படி பாதிக்கப்படும் நீரிழிவு நோயாளிகளுக்கு கடுக்காய் ஒரு வரப்பிரசாதம்.

கடுக்காய், சரியான அளவில் இன்சுலின் சுரப்பதற்கு கணைய பீட்டா செல்களை செயல்படுத்துகிறது.

மேலும் பிரக்டோஸை குளுக்கோஸாக உடைப்பதையும் குறைக்கிறது. இன்சுலினையும் ஒழுங்குபடுத்துகிறது.

கடுக்காயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் சருமத்தின் தரத்தை சேதமடையாமல் பாதுகாக்கிறது.

முகப்பரு, சொறி போன்ற தோல் நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

பெண்களின் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் அருமருந்தாக செயல்பட்டு கருவுறுதலையும் அதிகரிக்கிறது.

கடுக்காயில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான சிறந்த நிவாரணியாகவும் உள்ளது.

மேலும், மாசு, உணவுப் பழக்கம், அழகுசாதனப் பொருட்களின் பயன்பாடு, முடி உதிர்தல், வறட்சி, உடைதல் போன்ற பிரச்னைகளுக்கு கடுக்காய் பொடி சிறந்த மருந்து என்றே சொல்லலாம்.

கடுக்காய் பொடி மட்டுமல்லாமல் கடுக்காய் இலையும் பொடுகு மற்றும் முடி உதிர்தல் பிரச்னைகளை குறைத்து முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.

கடுக்காய் கண்களுக்கு மிகவும் நல்லது. கண் அழற்சி, வறண்ட கண்கள் மற்றும் கன்ஜன்க்டிவிடிஸ் (Conjunctivitis) சிகிச்சைக்கு பயனுள்ளதாகவும் உள்ளது.