138 degrees at the age of 55: Amazing former army soldier, 11 world records so far!  google
சிறப்புச் செய்திகள்

”55 வயதில் 138 பட்டங்கள்” : அசத்தும் முன்னாள் ராணுவ வீரர் : இதுவரை 11 உலக சாதனைகள்!

2004-இல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற தசரத் சிங், என்பவர் இது வரை 138 டிகிரி வாங்கி சாதனை படைத்துள்ளார்

Rohini

உலக சாதனை

ராஜஸ்தானைச் சேர்ந்த முன்னாள் இந்திய ராணுவ வீரரான தசரத் சிங், என்பவர் தன்னுடைய 55 வயதில், 138 பட்டங்களைப் பெற்று 11 உலக சாதனைகள் படைத்துள்ளார்.

வாழ்க்கை பின்னணி

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தின் கிரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரத் சிங்.

ராாணுவ வீரர்

விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், ஓர் அரசுப் பள்ளியில் தனது 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப் படிப்பை முடித்திருந்த நிலையில் ,தற்போது 55 வயதான இவர், 1988-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 16 ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்து வந்தார்.

ராணுவத்தில் பணியாற்றியபடியே கல்வியிலும் தன் திறமையைக் காட்டி வந்தார்.

அதற்காக தனது வருடாந்திர இரண்டு மாத விடுப்பைத் தேர்வுகளில் பங்கேற்க எடுத்துக் கொண்டார்.

கல்விக்காக அர்ப்பணிப்பு

ராணுவத்தில் பணியாற்றிய இவர் தொடர்ந்து கல்விக்காக தன்னை அர்ப்பணித்து வந்திருக்கிாறார்.

படிப்பில் சாதனை

குறிப்பாக இதுவரை அவர் 38 பட்டங்களைப் பெற்றிருப்பதாகவும் இதில் 3 முனைவர் பட்டங்களும், 7 இளங்கலைப் பட்டங்களும், 46 முதுகலைப் பட்டங்களும், 23 பட்டயங்களும் அடக்கம்.

இவை தவிர, 7 ராணுவப் படிப்புத் தகுதிகளும் மற்றும் 52 சான்றிதழ்களும் அடங்கும்.

சர்வேதச அங்கீகரிப்பு

கல்விக்காக தன்னையே ற்பணித்து கொண்ட இவற்ற்கு சர்வதேச அளவில் அங்கீகாரமானது அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய சாதனைப் புத்தகம், தங்க சாதனைப் புத்தகம், ஆசிய சாதனைப் புத்தகம் மற்றும் சர்வதேச சாதனைப் புத்தகம் உள்ளிட்ட பல மதிப்புமிக்க சாதனைப் புத்தக அமைப்புகளால் அங்கீகரிக்கம் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்திற்கும் உதவி புரிந்து வருகிறார்

ஓய்வு பெற்ற இவர் ராணுவத்தின் சக்தி கமாண்டில் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியதன் விளைவாக , பணியில் ஓய்வுபெற்ற பின்பு, வீரர்களுக்கு சட்ட விஷயங்களில் தொடர்ந்து உதவிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

===============