Information Technology Minister Ashwini Vaishnav received the Guinness World Record Award from the AI ​​Conference. Source : google
சிறப்புச் செய்திகள்

AI Impact Summit 2026: ஒரே நாளில் 2.5 லட்சம் மாணவர்கள் உறுதியேற்பு, கின்னஸ் சாதனை படைத்த இந்தியா!

AI Impact Summit 2026 : ஏஐ மாநாடு தொடங்கி வைக்கப்பட்ட முதல் நாளில் மட்டும் 2.50 லட்சம் மாணவர்கள் ஏஐ பயன்பாட்டிற்கான உறுதி மொழியை எடுத்துள்ளனர். இந்நிகழ்வு கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

S Kavitha

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் :

AI Impact Summit 2026: On the first day of the AI ​​conference alone, 2.50 lakh students took a pledge to use AI, making it into the Guinness Book of Records : டெல்லியில் பிப்ரவரி 16 ஆம் தேதி ஏஐ உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த மாநாடு 16 ஆம் தேதி முதல் பிப். 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர்.

உலகலாவிய முதல் உச்சி மாநாடு

உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெறக்கூடிய முதல் உச்சி மாநாடு என்ற பெருமையை இந்த ஏஐ உச்சி மாநாடு பெற்றுள்ளது.

20 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு

இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகைத் தருமாறு பிரதமர் நரேந்திர மோடி இருபது நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை அழைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், சுலோவாக்கியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஏஐ உச்சி மாநாட்டிற்கு வருகை தந்தனர்.

டெல்லி மாநாட்டின் ஏஐ உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பாரத் மண்டபத்தில் சிறப்பு கண்காட்சியும் நடைபெற்றது.

கின்னஸ் சாதனை படைத்த ஏஐ உச்சி மாநாடு

உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெறும் முதல் உச்சி மாநாடு என்ற பெருமையை பெற்றதுடன், கின்னஸ் சாதனையையும் நிகழ்த்தியுள்ளது.

கின்னஸ் சாதனை படைத்த ஏஐ உச்சி மாநாடு

ஏஐ மாநாடு தொடங்கி வைக்கப்பட்ட முதல் நாளில் மட்டும் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மாணவர்கள் ஏஐ பயன்பாட்டிற்கான உறுதி மொழியை எடுத்துள்ளனர். இந்நிகழ்வு கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாணவர்களின் ஏஐ பயன்பாட்டிற்கான உறுதிமொழி பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. இதை கின்னஸ் உலக சாதனை நடுவர் பார்த்து அங்கீகரித்து, தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் விருதை பெற்றுக்கொண்ட அஸ்வினி வைஷ்ணவ்

இந்த ஏஐ மாநாட்டின் கின்னஸ் சாதனைக்கான விருதை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெற்றுக்கொண்டார். கின்னஸ் சாதனை குறித்து அவர் பேசும் போது, இந்த விருது பிரதமர் மோடிக்கு அர்ப்பணிக்கப்படுவதாக கூறினார்.

கின்னஸ் விருது, பிரதமருக்கு அர்ப்பணம்

வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பந்தை மாணவர்களும், இளைஞர்களும் ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமர் மோடிக்கு தான் இந்த சாதனை விருது சமர்ப்பனம் என்றும் அவர் கூறினார்.

மாணவர்களுக்கு பாராட்டு

மேலும், இந்த ஏஐ மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மாணவர்களுக்கு எனது பாராட்டுகள்.

ஏனென்றால் முதலில் ஐந்தாயிரம் மாணவர்கள் உறுதி ஏற்பது தான் இலக்காக இருந்தது. ஆனால் மாணவர்களின் ஆர்வத்தால், பங்களிப்பால் இந்த அசாத்திய சாதனை நடந்துள்ளது.

இந்தியாவிற்கு பெருமைவாய்ந்த நாள்

இந்தியர்கள் ஏஐ தொழிநுட்பத்தை விழிப்புணர்வுடன் கையாள முயல்வதை இதை காட்டுகிறது. மொத்தத்தில் இந்நாள் இந்திய நாட்டிற்கு பெருமை வாய்ந்த நாள் என்று பெருமிதம் கொண்டார்.