சிறப்புச் செய்திகள்

திருமணத்தை பார்த்து அஞ்சும் அமெரிக்கப் பெண்கள் : காரணம் இதுதான்

அமெரிக்காவில் உள்ள பெண்கள் திருமண வாழ்க்கை மற்றும் காதலில் நம்பிக்கை இழந்து வருவதாகவும், சுதந்திரமாக தனிமையில் இருக்க விரும்புவதாக ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது.

S Kavitha

” வோல் ஸ்ட்ரீட் ஜர்னல்” என்ற பத்திரிகையின் ஆய்வுகளின் படி திருமணமாகாத பெண்கள் திருமணத்தை விரும்பவில்லை என்றும்,திருமணமான பெண்கள் திருமண வாழ்விலிருந்து விடுபட்டு ஒற்றைத் தாய்மார்களாக மாறுவதையே தேர்வு செய்கிறார்கள் என்றும் அந்த வாழ்க்கை முறையில் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்வதாகவும் கூறுகிறது.

மேலும், அமெரிக்க பெண்கள் தங்கள் சுதந்திரத்தில் தலையிட்டு, தடுத்து நிறுத்தும் ஆண்களுடன் இருப்பதை விட தனியாக இருப்பதையே விரும்புவதாகவும் கூறுகிறது.

தற்போது திருமண உறவுகளில் இருந்து விலகி தனியாக வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாம்.

எனினும் அவர்களின் வாழ்க்கைத் துணையை விட தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

2019-இல் திருமணமாகாத பெண்களில் 38% பேர் தீவிரமாக தங்களுக்கான துணையைத் தேடியதாகவும், 2022 ஆய்வின் படி 34 % சதவீதமாக இருந்ததாகவும் தெரிவிக்கிறது.

ஒருபக்கம் அமெரிக்க பெண்கள் தனிமையை விரும்பினாலும் ஆண்கள் இதை விரும்பவில்லையாம்.

திருமணமாகாத ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டும் தான் திருமணம் செய்யாமல் தனிமையை விரும்புவதாகவும் கூறுகிறது.

துறை ரீதியாக வளர்ச்சியடைந்த பெண்களைத் திருமணம் செய்வதற்கு ஆண்கள் தயங்குவதாகவும், பெண்களின் தொழில் வளர்ச்சியைப் பார்த்து ஆண்கள் மிரட்சியடைவதாகவும் தெரிகிறது.

கல்வி,போதிய வருமானம், தொழில் வளர்ச்சி முதலானவை தான் பெண்களிடையே இந்த மாற்றம் ஏற்படுவதற்கான காரணமாக உள்ளது.

2024ஆம் ஆண்டில் 25முதல் 34 வரையிலான அமெரிக்க பெண்களில் 47% சதவீதம் பேர் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தனர்.

அதே நேரத்தில் 37% ஆண்கள் மட்டுமே இந்த தகுதியை் பெற்றிருந்ததாகவும் ஆய்வு முடிவு கூறுகிறது.

====