Do you know why only the Gulf countries have more Crude oil resources? here is Full Details in Tamil google
சிறப்புச் செய்திகள்

வளைகுடா நாடுகளில் மட்டும் அதிமாக எண்ணெய் வளங்கள் : காரணம் தெரியுமா...?

Oil Reserves in Gulf Countries : எரிபொருட்களின் உற்பத்தியில் ஏன் வளைகுடா நாடுகளே அதிகம் ஈடுபடுகின்றன ? அங்கு மட்டும் ஏன் என்னை வளங்கள் அதிகமாக கிடைப்பதற்கான காரணத்தை இங்கு காணலாம்

Rohini

ளைகுடா நாடுகளில் எண்ணெய் வளங்கள் கிடைப்பதற்கான காரணம்

Oil Reserves in Gulf Countries : வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் போன்ற நாடுகள் எண்ணெய் உருவாவதற்கு ஏற்ற புவியியல் நிலைமைகளுடன், பல கோடி வருடம் முன் செழிப்பாக இருந்த கடற்பரப்புகளின் மேல் அமைந்துள்ளன.

டெக்டோனிக் நகர்வுகளும் இந்த கச்சா எண்ணெய்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. அதனால் இன்று உலகளாவிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் 48% வளைகுடா நாடுகளே உற்பத்தி செய்கின்றன.

கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது

மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல்களில் வாழ்ந்த நுண்ணியத் தாவரங்கள், விலங்குகளின் எச்சங்களிலிருந்து இந்த கச்சா எண்ணெய் உருவாகிறது.

இந்த உயிரினங்கள் இறந்து கடலடியிலே இருக்கும்போது மணல் அடுக்குகள் (layers of sediment) அதன்மீது படிப்படியாக படிந்து தங்கும்போது .

இதனால், அவை அபரிமிதமான வெப்பம், அழுத்தத்திற்கு ஆளாகி; புவியியலால் காலப்போக்கில் இவை ஹைட்ரோகார்பன்களாக (hydrocarbons) மாற்றமடைகிறது.

இவைதான் காலப்போக்கில் கச்சா எண்ணெயாக கிடைக்கிறது

கச்சா எண்ணெயில் இருந்து எரிபொருட்கள் எப்படி பிரித்தெடுக்கப்படுகிறது

கச்சா எண்ணெயிலிருந்து வடிகட்டுதல் (fractional distillation) மூலம் 8-10 வரை வகையான எரிபொருட்கள் சுத்திகரிக்கப்படுகின்றன.

பின்பு சில வெப்பநிலைகளுக்கு உட்படுத்தப்பட்டு பிரித்தெடுக்கப்படுகிறது

அவை பின்பு LPG ,பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற அத்தியாவசிய பயன்பாட்டு எரிபொருளாக கிடைக்கின்றது

இந்தியாவில் கச்சா எண்ணெய் எவ்வாறு பெறப்படுகிறது

இந்தியாவிற்கு தேவையான முக்கிய எரிபொருள் பயன்பாட்டு தேவைகளுக்க முற்றிலும் இறக்குமதியைத்தான் சார்ந்துள்ளது.

நாட்டின் கச்சா எண்ணெய் தேவைகளில் 85%க்கும் அதிகமாக வளைகுடா நாடுகளில் இருந்துதான் வாங்கப்படுகிறது.