Find Missing Earbud Using ChatGPT AI Photo Analysis source:ai generated
சிறப்புச் செய்திகள்

தொலைந்த இயர்பட்டைக் கண்டுபிடிக்க உதவிய ChatGPT : கூழாங்கற்களுக்கு இடையே ஏ.ஐ செய்த சுவாரசியக் கண்டுபிடிப்பு!

வெள்ளைக் கூழாங்கற்களுக்கு இடையே தவறவிட்ட ஒயர்லெஸ் இயர்பட்டை சாட்ஜிபிடி ஏ.ஐ புகைப்படத்தை ஆராய்ந்து 5 நிமிடத்தில் கண்டுபிடித்துக் கொடுத்துள்ளது.

Kavitha prasanna

Find Missing Earbud Using ChatGPT AI Photo Analysis

தொலைந்த பொருட்களைக் கண்டுபிடிக்க ஏ.ஐ உதவி

இன்றைய நவீன காலத்தில் ஒயர் வைத்த செவிப்பொறுத்திகளுக்குப் பதிலாக, ஒயர்லெஸ் (Wireless Earbuds) இயர்பட்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், இவை அளவில் மிகவும் சிறிதாக இருப்பதால் தவறவிட்டால் கண்டுபிடிப்பது கடினமான சவாலாகவே உள்ளது.

இந்நிலையில், கூழாங்கற்கள் நிறைந்த தரைப்பகுதியில் விழுந்த சிறிய ஒயர்லெஸ் இயர்பட்டை ஏ.ஐ (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடித்த சுவாரசியமான சம்பவத்தை நெட்டிசன் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

பாக்கெட்டிலிருந்து நழுவிய இயர்பட்

ரெடிட் தளத்தில் இச்சம்பவம் குறித்துப் பதிவிட்டுள்ள பயனர், தான் அணிந்திருந்த போஸ் (Bose) ஒயர்லெஸ் இயர்பட்களில் ஒன்று பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

போஸ் இயர்பட்கள் காதுக்குள் இருக்கும் வரை மட்டுமே போனுடன் இணைப்பில் இருக்கும் தொழில்நுட்பம் கொண்டது. இதனால் புளூடூத் மூலம் சத்தமாகப் பாட்டு போட்டுத் தேடும் சாதாரண வழியைப் பயன்படுத்த முடியாமல் போனது.

தேடலில் ஏற்பட்ட சலிப்பு

வெள்ளை நிறக் கூழாங்கற்கள் நிறைந்த தரையில் அதே வெள்ளை நிற இயர்பட்டை சுமார் 10 நிமிடங்கள் தேடியும் கிடைக்காததால் சலிப்படைந்த அவர், சாட்ஜிபிடி-யின் உதவியை நாடியுள்ளார்.

சாட்ஜிபிடி செய்த அற்புதம்

இயர்பட் தவறவிட்ட பகுதியின் புகைப்படத்தை உடனடியாகத் தனது செல்போனில் படம் பிடித்து சாட்ஜிபிடி-யில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தை நுணுக்கமாக ஆராய்ந்த சாட்ஜிபிடி, கூழாங்கற்களுக்கு இடையே இயர்பட் சரியாக எந்தப் புள்ளியில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

5 நிமிடத்தில் தீர்வு

புகைப்படம் பதிவேற்றியதிலிருந்து இயர்பட்டைக் கையில் எடுக்கும் வரை 5 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகியுள்ளது. "சாட் ஜிபிடி இல்லையென்றால் இதை என்னால் கண்டுபிடித்திருக்கவே முடியாது" என்று அந்த பயனர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்

2,800-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்ற இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. "ஏ.ஐ-யின் 'இமேஜ் ரெகக்னிஷன்' (Image Recognition) திறன் மிகவும் முன்னேறியுள்ளது.

ஒரு புகைப்படத்தைப் பெரிதாக்கி, வெவ்வேறு கோணங்களில் ஃபில்டர்களைப் பயன்படுத்தித் தேடும் சாமர்த்தியம் ஏ.ஐ-க்கு உண்டு" என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.

"தேவையற்ற விஷயங்களுக்குப் பயன்படுத்துவதால் மட்டுமே ஏ.ஐ வீண் என்று சொல்வதை நிறுத்த வேண்டும். இதோ எவ்வளவு அற்புதமான பயன்பாடு" என மற்றொருவர் பாராட்டியுள்ளார்.

=================