From Now On, One Day Will Last 25 Hours! NASA Scientists' Startling Prediction-What Is the Background?
விஞ்ஞானிகளின் கணிப்பு
காலம் பொன் போன்றது என்பார்கள், ஆனால் அந்த காலமே மாறப்போகிறது என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது தற்பொது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 மணிநேரம் To 25 மணிநேரம்
ஆம் எதிர்காலத்தில் பூமியின் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்திற்குப் பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
பூமியின் வேகம் குறைகிறதா?
பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வேகம் காலப்போக்கில் குறைந்து வருவதே இந்த மாற்றத்திற்கு அடிப்படை காரணமாக உள்ளதாம். விஞ்ஞானிகளின் கணக்கீட்டின்படி, ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் பூமியின் சுழற்சி வேகம் 1.7 மில்லி செகண்ட் குறைகிறது.
இதற்கு காரணம் என்ன?
நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான ஈர்ப்பு விசை காரணமாக, நிலவு மெல்ல மெல்ல பூமியை விட்டு விலகிச் செல்கிறது. நிலவு விலகிச் செல்லச் செல்ல, பூமியின் சுழற்சி வேகத்தில் உராய்வு ஏற்பட்டு அதன் வேகம் குறைகிறது.
டைனோசர் காலத்தில் 23 மணி நேரம் தானா?
பூமியின் கால அளவுகள் வரலாற்றில் நிலையாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது:
பூமி தோன்றிய காலத்தில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரமாக இருந்தது.
டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள் என்பது 23 மணி நேரமாக இருந்தது.
எதிர்காலத்தில் எப்போது 25 மணி நேரமாகும்?
நிச்சயமாக இது நாளைக்கே நடந்துவிடாது. இதே நிலை நீடித்தால், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே ஒரு நாளின் கால அளவு 25 மணி நேரமாக முழுமையாக மாறும்.
கூடுதல் 1 மணி நேரம்
அந்த காலகட்டத்தில் வாழும் மனிதர்களுக்கு அல்லது உயிரினங்களுக்கு ஒரு நாளில் கூடுதல் ஒரு மணி நேரம் கிடைக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
======