Good News for Shopping Enthusiasts! 'CarryMen' Service Launched in Delhi to Carry Your Bags! source: carrymenindia,instagram
சிறப்புச் செய்திகள்

ஷாப்பிங் பிரியர்களுக்கு குட் நியூஸ்! : பைகளை சுமக்க டெல்லியில் அறிமுகமானது 'கேரிமென்' சேவை!

"நீங்கள் ஷாப்பிங் செய்யுங்கள், உங்கள் பைகளை நாங்கள் சுமக்கிறோம்" (You Shop, We Carry) என்ற எளிய தாரக மந்திரத்துடன் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Kavitha prasanna

ஷாப்பிங்கு இனி கவலை இல்லை

வார இறுதி நாட்களிலோ அல்லது பண்டிகை காலங்களிலோ மால்கள் மற்றும் வணிக வளாகங்களுக்குச் சென்று ஷாப்பிங் செய்வது பலருக்கும் பிடிக்கும்.

ஆனால், அப்படி ஷாப்பிங் செய்து முடித்த பிறகு, கனமான பைகளை கைகளில் சுமந்து கொண்டு நீண்ட தூரம் நடப்பதும், பில்லிங் வரிசையில் நீண்ட நேரம் காத்து நிற்பதும் பெரும் சோர்வை ஏற்படுத்தும்.

CARRYMEN

ஷாப்பிங் பிரியர்களின் இந்தச் சிரமத்தைக் குறைக்கும் வகையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 'கேரிமென்' (CARRYMEN) என்ற ஒரு புதுமையான ஸ்டார்ட்-அப் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

'கேரிமென்' சேவை என்றால் என்ன?

"நீங்கள் ஷாப்பிங் செய்யுங்கள், உங்கள் பைகளை நாங்கள் சுமக்கிறோம்" (You Shop, We Carry) என்ற எளிய தாரக மந்திரத்துடன் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்களுக்குள் நீங்கள் வாங்கும் பொருட்களின் பைகளை உங்களுடன் வந்து ஒரு உதவியாளரைப் போலச் சுமந்து செல்வதே இவர்களின் முதன்மைப் பணி.

ரிலாக்ஸாக ஷாப்பிங் செய்ய வேண்டுமா?

இதன் மூலம், கைகளில் பைகளின் எடையைத் தாங்கிக் கொண்டு அவதிப்படாமல், வாசகர்கள் மிகவும் நிம்மதியாகவும் ரிலாக்ஸாகவும் தங்களது ஷாப்பிங்கைத் தொடர முடியும்.

கட்டணம் மற்றும் எடையின் விவரங்கள்

இந்த சேவையைப் பயன்படுத்துவதற்கு மிகவும் குறைவான மற்றும் நியாயமான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது:

அதிகபட்ச எடை: ஒரு நபர் அதிகபட்சமாக 12 கிலோ வரை எடையுள்ள பொருட்களைச் சுமந்து செல்வார்.

சேவைக் கட்டணம்: இந்தச் சேவைக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 149 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கூடுதல் சலுகைகள்

பைகளைச் சுமப்பது மட்டுமின்றி, ஷாப்பிங் செய்பவர்களுக்கு 'கூடுதல் சௌகரியம்' அதாவது Extra Comfort தரும் வகையில் சில பிரத்யேக வசதிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.

பில்லிங் கவுண்டரிலும் 'கேரிமென்'

பில்லிங் கவுண்டர்களில் உங்களுக்காக வரிசையில் நிற்பது போன்ற சிறு உதவிகளையும் இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால், டெல்லி மக்களிடையே இந்தச் சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழகத்திலும் இதுபோன்ற சேவைகள் பெரிய மால்களில் அறிமுகப்படுத்தப்பட்டால், வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் ஷாப்பிங் செல்பவர்களுக்கு அது பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

=====