India's Bengaluru achieved 13th spot on the list of the world's top 20 food cities for 2026.  google
சிறப்புச் செய்திகள்

சிறந்த உணவு நகரம் : "பிரபல நகரங்களை பின்னுக்கு தள்ளி இடம்பிடித்த பெங்களூரு" : உணவுப் பிரியர்கள் மகிழ்ச்சி!

பிரபல சர்வதேச இதழான 'டைம் அவுட்' வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் உலகின் 20 சிறந்த உணவு நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் 13 இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது

Rohini

சிறந்த உணவு நகரம் : இந்தியாவிற்கு 13 வது இடம்

பிரபல சர்வதேச இதழான 'டைம் அவுட்' வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டின் உலகின் 20 சிறந்த உணவு நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் 13 இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது

பிரபல உணவு நகரங்களை பின்னுக்கு தள்ளிய பெங்களூரு நகரம்

இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உணவு வகைகளுக்குப் பெயர் பெற்ற டெல்லி அல்லது லக்னோ போன்ற நகரங்களை ஓரங்கட்டி பெங்களூர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது

மக்களின் விருப்ப அடிப்படையில் பட்டியல் வெளியீடு

உலகெங்கிலும் உள்ள சுமார் 24,000-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தப் பட்டியலின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது ,குறிப்பாக இந்த முடிவு வெளியிடுகள் ,

உணவின் தரம், விலை மலிவு மற்றும் பன்முகத்தன்மை ஆகிய காரணிகளின் அடிப்படையில் நகரங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

24,000-க்கும் அதிகமான மக்களிட்ம பெறப்பட்ட தரவுகளை வைத்து இந்த பட்டியலானது தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

முதல் 5 இடங்களை பெற்ற நகரங்கள்

இந்த பட்டியலின் அடிபடையில் முதல் 5 இடங்களைப் பிடித்த நகரங்களின் பட்டியலில் 1. லிமா, பெரு 2. பாங்காக், தாய்லாந்து ( 3. மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ) 4. லண்டன், இங்கிலாந்து 5. பார்சிலோனா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதல் 5 இடத்தை பெற்றுள்ளன

உணவு பிரியர்கள் மகிழ்ச்சி

பெங்களூரு 13-வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இத்தாலியின் நேபிள்ஸ் (Naples) மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் போன்ற நகரங்களையும் இது பின்னுக்குத் தள்ளியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிற்கு கிடைத்துள்ள இந்த சர்வதேச அங்கீகாரம் இந்திய உணவுப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

=======================