International Women's Day 2026 :
நாளை சர்வதேச மகளிர் தின விழா
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நாளை சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்படவுள்ளது.
ஒட்டுமொத்த உலக பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், பாலின சமத்துவம், சம உரிமை மற்றும் பெண்களுக்கன அதிகாரம் அளித்தல் முதலானவற்றை வலியுறுத்துவதற்கும் ஏற்ற நாளாக சர்வதேச மகளிர் தினம் அர்ப்பணிக்கப்படுகிறது.
ஐ.நா. அங்கீகாரம்
ஐக்கிய நாடுகள் சபை 1975-ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியை "சர்வதேச மகளிர் ஆண்டு " என அறிவித்தது. அந்த ஆண்டின் மார்ச் 8-ம் தேதிதான் ஐ.நா முதன்முதலில் சர்வதேச மகளிர் தினத்தை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடத் தொடங்கியது.
கருப்பொருள் அறிவிக்க தொடங்கிய ஆண்டு
இதைத்தொடர்ந்து சர்வதேச மகளிர் தினத்திற்கான ஒரு குறிப்பிட்ட மையக்கருத்தை அறிவிக்கும் வழக்கத்தை ஐ.நா 1996-ல் தொடங்கியது.
சர்வதேச மகளிர் தின கருப்பொருள்
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடும் போதும் கருப்பொருள் ஒன்று அறிவிக்கப்படும் . அதை மையமாக வைத்து தான் உலக நாடுகள் அனைத்தும் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவர்.
இந்த ஆண்டிற்கான கருப்பொருள்
"Give To Gain"
பிறர் வளர கொடுத்து வாழ் அல்லது கொடுத்தால் உயர்வோம், பெறுவதற்குக் கொடு என்பது போல தாராள மனப்பான்மை, ஒத்துழைப்பு,
பாலின சமத்துவம் முதலானவற்றை குறிக்கும் வகையில் இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக "Give To Gain" (Rights. Justice. Action. For All Women and Girls) கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த சமுதாயமும் உயரும்
பெண்களுக்கான தலைமை அதிகாரம் வழங்குதல், அவர்களுக்கான சமத்துவ கல்வி, வேலைவாய்ப்பு முதலானவை கொடுக்கப்படும் போது பெண்கள் மட்டும் அல்ல ஒட்டு மொத்த சமுதாயமும் உயர்கிறது என்பதையே இந்த கருப்பொருள் உணர்த்துகிறது.
நீடிக்கும் பாலின தடைகள்
மேலும் பாலின சமத்துவத்திற்கு குறிப்பிடத்தக்க தடைகள் தற்போதும் நீடித்து வருகின்றன.
எனினும் "Give To Gain" ஆதரவு கொடுப்பதன் மூலம் அர்ப்பணிப்புள்ள வளங்கள் மற்றும் ஆதரவுடன், இச்சமுதாயம் நேர்மறையான முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை வலியுறுத்துகிறது.
"Give To Gain “Rights. Justice. Action. For All Women and Girls” பெண்களுக்கான உரிமை, நீதி, அதிகாரம் முதலானவை அனைத்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் ஐ. நா.வின் இந்த ஆண்டிற்கான கருப்பொருள்.
இவை அனைத்தும் பெண்களுக்கும், குழந்தைகளுக்குமான வளர்ச்சி மட்டுமல்ல, நமக்கானதும் தான். அவர்கள் முன்னேறும் போது இந்த சமுதாயமும் முன்னேறும் என்பதுதான் அடிப்படை பொருளாக அமைந்துள்ளது.
அனைத்து பெண்களுக்கும் அவர்களுக்கான Rights. Justice. Action இவை அனைத்தும் கிடைத்திட வேண்டும். இச்சமூகமும் மேன்மையடைய வேண்டும்.
அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்!