Job opportunities in the Tamil Nadu Coastal Guard! How to apply... Guidelines released by the Marine Police. source: google
சிறப்புச் செய்திகள்

மீனவ இளைஞர்களுக்கு குட் நியூஸ் : கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

Indian Coast Guard Recruitment 2026 in Chennai, Tamil Nadu : ராமநாதபுரம் மீனவ இளைஞர்களுக்கு கடலோர கடற்படையில் சேருவதற்கான வேலைவாய்ப்பை மெரைன் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

S Kavitha

மீனவர்கள் பாதுகாப்பு

Indian Coast Guard Recruitment 2026 in Chennai, Tamil Nadu : தமிழக கடலோர பகுதிகளில் வாழும் மீனவர்கள், மீனவ இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நாட்டின் பாதுகாப்பில் மீனவ இளைஞர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

கடலோர காவல்படையில் வேலை

தற்போது ராமநாதபுரம் மீனவ இளைஞர்களுக்கு கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் சேருவதற்கான விண்ணப்பங்களை மெரைன் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த பணிக்கான அறிவிப்பானது ஏற்கெனவே நான்கு கட்டங்களாக நடைபெற்றுள்ளது. ஒரு கட்டத்திற்கு நாற்பது நபர்கள் வீதம் இதுவரையில் பயிற்சி அளிக்கப்பட்டு பணியும் வழங்கப்பட்டுள்ளது.

ஐந்தாம் கட்ட விண்ணப்பம்

இப்போது இந்த திட்டத்தின் ஐந்தாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மெரைன் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதன் மூலம் இந்த முறையும் நாற்பது மீனவ இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, மீன்று மாத கால பயிற்சியும், பணி ஆணையும் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலை மற்றும் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ராமநாதபுரம் மாவட்ட மீனவ இளைஞர்கள் jdrfisheries2@gmail.com மற்றும் tnfisheries@tn.nic.in என்ற இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பிப். 16ஆம் தேதிக்குள் அந்தந்த பகுகளில் உள்ள மெரைன் காவல்நிலையம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி எங்கே, எப்போது?

விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட மீனவ வாரிசுகளுக்கு கமுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் 3 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி நடைபெறும் தேதி பின்னர்ச்முறையாக தெரிவிக்கப்படும். மேலும் பயிற்சி காலத்தில், பயிற்சி பெரும் மீனவ இளைஞர்களுக்கான தங்கும் இடம், உணவு முதலானவை இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=====