New AI Technology Detects Cancer from Just a Single Drop of Blood!
உலக அளவில் மனித உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் நோய்களில் புற்றுநோய் முதன்மையானதாக உள்ளது.
ஆரம்பநிலையில் கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது
புற்றுநோயைப் பொறுத்தவரை, அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது மிகவும் எளிது. ஆனால், தற்போதைய மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்திலேயே இதனைக் கண்டறிவது சவாலாகவே இருந்து வருகிறது.
சீன விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு
இந்த நிலையை முற்றிலும் மாற்றி, மருத்துவ உலகில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், சீன விஞ்ஞானிகள் ஒரு புதிய அதிநவீனக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் நானோ தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து இந்தக் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது.
Westlake பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பு
சீனாவின் ஹாங்சோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற வெஸ்ட்லேக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
ஒரே ஒரு சொட்டு காய்ந்த இரத்தம் போதும்
இவர்களின் புதிய கண்டுபிடிப்பின்படி, மனித உடலில் இருந்து பெறப்படும் ஒரே ஒரு சொட்டு காய்ந்த இரத்தத்தை (Single drop of dried blood) ஆய்வு செய்வதன் மூலமே புற்றுநோய் பாதிப்பைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
குறிப்பாக, மனிதர்களை அதிகம் பாதிக்கக்கூடிய குடல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் கணையப் புற்றுநோய் ஆகியவற்றை இதன் மூலம் மிக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
10,000 மடங்கு அதிக துல்லியம்
இந்த ஏஐ மற்றும் நானோ தொழில்நுட்பக் கருவியானது புற்றுநோயைக் கண்டறிவதில் தற்போதைய வழக்கமான மருத்துவ பரிசோதனை முறைகளை விட சுமார் 10,000 மடங்கு அதிக துல்லியத்தன்மையுடன் செயல்படக்கூடியது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Early-stage Lung Cancer
ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதில் இந்தக் கருவி மிகச் சிறப்பான மற்றும் துல்லியமான முடிவுகளைக் கொடுத்துள்ளது மருத்துவ உலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவத் துறையினர் வரவேற்பு
புற்றுநோய் கண்டறிதலில் ஒரு புதிய விடியலாகக் கருதப்படும் இந்த அதிநவீனக் கருவிக்கு உலகெங்கிலும் உள்ள மருத்துவத் துறையினர் மற்றும் புற்றுநோய் நிபுணர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் பாராட்டும் கிடைத்து வருகிறது.
புற்றுநோய் பரிசோதனைக்கான செலவையும் நேரத்தையும் பெருமளவு குறைக்கக்கூடிய இக்கருவியை, மிக விரைவில் பொதுமக்களின் மருத்துவப் பயன்பாட்டிற்கு கொண்டு sவருவதற்கான தீவிர நடவடிக்கைகளில் சீன அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது.
======