One polling booth for 5 people in Tamil Nadu "demonstrates the strength of democracy" information about Vellimalai  google
சிறப்புச் செய்திகள்

தமிழகத்தில் ”5 பேருக்காக ஒரு வாக்குச்சாவடி” : ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றும் வெள்ளிமலை குறித்து பார்க்கலாம்

வெள்ளிமலை என்னும் மலை பகுதியில் 5 பேருக்காக மட்டும் ஒரு வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது ,ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுவதாக இருப்பதாக ஞானேஸ்குமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்

Rohini

சட்டமன்ற தேர்தல் 2026

Vellimalai Polling Booth in TN Assembly Election 2026 : தமிழக்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் தேதியினை இந்திய தலைமை தேர்தலை ஆணையர் ஞானேஸ்குமார் அறிவித்தார் .அதன்படி தமிழகத்திற்கு ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.

மேலும் தேர்தல் இறுதி முடிவானது மே 4 ம் தேதி வெளியாகும் என்று , தேர்தல் குறித்த கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் அவர் வெளியிட்டு அதற்கான அதிகாரிகளையும் நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கவனம் பெரும் வருசநாடு வெள்ளிமலை

தேர்தல் தேதி அறிவிக்கபட்டதை அடுத்து தேனி மாவட்டம் வருசநாடு அருகே வெள்ளிமலை என்னும் பகுதியில் 5 பேருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும் என்றும் தேர்தல் தலைமை அதிகாரி ஞானேஸ்குமார் தெரிவித்திருந்தார் .

மேலும் இது பற்றி அவர் கூறும்போது ஜனநாயகத்தின் வலிமையை பறைசாற்றுகிறது என்றும் ,அப்பகுதிக்கு செல்ல அம்மக்களுக்கு அணைத்து ஏற்பாடுகளுக்கு செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்

வியப்பில் ஆழ்த்தி இருக்கும் வாக்குசாவடி

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட எஸ்ஐஆர் நடவடிக்கையால் வெள்ளிமலையில் இருந்த 6 வாக்காளர்களில் ஒரு வாக்கு நீக்கம் செய்யப்பட்டு, செந்தில், ஜெயராணி, சுதா, பவுல் மற்றும் ரோகித் என வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 5 ஆக குறைந்தது இருக்கிறது

ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வசதி

இருப்பினும், அவர்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இங்குள்ள அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் வாக்குச் சாவடி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வாக்கு சாவடி மையம் மிகுந்த கவனத்தை பெற்று இருக்கிறது