Plastic in the air. More than 20 times more microplastic particles: New study results break previous predictions  google
சிறப்புச் செய்திகள்

காற்றில் கலக்கும் பிளாஸ்டிக், “20 மடங்கு மைக்ரோ பிளாஸ்டிக்” : முந்தைய கணிப்புகளை உடைக்கும் புதிய ஆய்வு முடிவுகள்!

கடலை விட நிலப்பரப்பில் இருந்துதான் 20 மடங்குக்கும் அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் காற்றில் கலப்பதாக புதிய ஆய்வு ஒன்று தற்போது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது

Rohini

20 மடங்குக்கும் அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்

தற்போது கணடறியப்பட்டுள்ள அறிக்கையின் படி கடலை விட நிலப்பரப்பில் இருந்துதான் 20 மடங்குக்கும் அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் காற்றில் கலப்பதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இதுவரை புரிந்துகொள்ளப்பட்ட தவறான தகவல்

நம் கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய பிளாஸ்டிக் துகள்களான மைக்ரோபிளாஸ்டிக்ஸ், காற்றில் மிதந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆனால், அதன் உண்மையான மூலம் எது என்பது பற்றி இதுவரை தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருகிறது .

புதிய அறிக்கையி்ல் தகவல்

ஆனால் தற்போது புதிய ஆய்வு ஒன்று , கடலை விட நிலப்பரப்பில் இருந்துதான் 20 மடங்குக்கும் அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் காற்றில் கலப்பதாகக் காட்டுகிறது.

இது முந்தைய நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல, காற்றில் எவ்வளவு பிளாஸ்டிக் உள்ளது என்பதை முந்தைய மாடல்கள் மிகைப்படுத்திக் காட்டியதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்

தீங்கு விளைவிக்கும் ,மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை உலகம் முழுவதும் பரப்புவதில் காற்று முக்கிய பங்கு வகித்து வருகிறது . இந்த சிறிய துகள்களை மிகவும் தொலைதூரப் பகுதிகளுக்குக் கூட அது கொண்டு செல்வதாகும் தெரிகிறது

மனிதர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்

மனிதர்களும் விலங்குகளும் இதை சுவாசிக்க நேரிடுவதால், உடல்நலப் பாதிப்புகள் சுவாச கோளாறு பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகின்றது.இந்த காற்றில் கலந்த பிறகு,

இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மீண்டும் பூமிக்குத் திரும்பி, கடல்களிலும் நிலத்திலும் மாசுபாட்டை அதிகரிக்கிறது.

கடலை விட நிலப்பரப்பில் 20 மடங்கு அதிகம்

வியன்னா பல்கலைக்கழகத்தின் வானிலை மற்றும் புவி இயற்பியல் துறை நடத்திய புதிய ஆய்வு ஒன்றில் காற்றில் மிதக்கும் இந்த மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எங்கிருந்து வருகிறது என்பது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஆராய்ச்சியாளர்கள் நிலம் மற்றும் கடல் மூலங்களிலிருந்து வெளியேறும் துகள்களின் அளவைக் கணித்து ,கடலை விட நிலப்பரப்பில் 20 மடங்கு அதிகமான துகள்கள் இருப்பதாக புதிய தகவல்களை அறிவித்துள்ளது.

மைக்ரோபிளாஸ்டிக் குறித்த பின்னணி ஆராய்ச்சி

ஆராய்ச்சியாளர்களான Ioanna Evangelou, Silvia Bucci மற்றும் Andreas Stohl ஆகியோர் உலகெங்கிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து 2,782 தனிப்பட்ட மைக்ரோபிளாஸ்டிக் அளவீடுகளைத் தொகுத்தனர்.

பின்னர், இந்த நிஜ உலக அவதானிப்புகளை, மூன்று வெவ்வேறு உமிழ்வு மதிப்பீடுகளைக் கொண்ட ஒரு போக்குவரத்து மாடலின் முடிவுகளுடன் ஒப்பிட்டனர். பின்னர் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

===========