Pradhan Mantri Awas Yojana 2.0 Urban Apply Online : 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி யோஜனா திட்டமானது ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் வீடு என்னும் முக்கியத்துவத்தைக் கொண்டு தொடங்கப்பட்டது.
எனினும் 2016 நவம்பர் 20 ஆம் தேதி ஆக்ராவில் பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கு முன்னுரிமை
இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வீடுகள் பெண்களின் பெயரிலோ, அல்லது கணவன், மனைவியின் பெயரிலோ இணைத்து வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் இந்த திட்டம் பெண்களுக்கு முன்னுரிமையும், அதிகாரமளிப்பையும்,பாலின சமத்துவத்தையும் உறுதி செய்கிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா PMAY-U-PMAY-U 2.0
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் PMAY-U மற்றும் PMAY-U 2.0 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. PMAY-U திட்டத்தின் கீழ் இதுவரையில் 95.51 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைகப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தான் PMAY-U 2.0 எனப்படும் திட்டம் நகர்ப்புற பயனாளிகளுக்காக புதுப்பிக்கபட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா PMAY-U பயன்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா PMAY-U திட்டத்தின் மூலம் தகுதியுள்ள ஒவ்வொரு பயனாளிகளுக்கும் , புதிய வீடு வாங்கவோ அல்லது கட்டுவதற்கு உதவுவதற்காக ரூ. 2.50 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா PMAY-U 2.0
அதேபோல் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா PMAY-U 2.0 திட்டம் 2024 ஆம் ஆண்டில் இருந்து 2029 ஆம் ஆண்டு வரையில் நீட்டிக்கப்பட்டு, 1 கோடி வீடுகளை கட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இதன்மூலம் ரூ. 2.50 லட்சம் கோடி வரை கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.
நான்கு நிலைகள்
BLC என்பது தனிப்பட்ட நிலத்தில் வீடு கட்டுவதற்கு கடன் வழங்கும் திட்டமாகும். இதன்மூலம் 2.5 லட்சம் வரை கடன் பெற முடியும். AHP என்பது பொது மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கட்டப்படும் மானிய வீடுகளை குறிக்கும்.
35 லட்சம் வரையிலான வீடுகளுக்கு 25 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் தான் ISS.
நான்காவது ARH. இது புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் ஏழைகளுக்கான வாடகை வீடுகளை உறுதி செய்வதற்கான திட்டம் ஆகும்.
பெங்களூர், கர்நாடகா
தற்போது பெங்களூர் மற்றும் கர்நாடகாவில் இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது மலிவு விலை வீட்டுத் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏழ்மை நிலையில் உள்ள வீடு இல்லாதவர்கள் நகரங்களில் குறைந்த வருமானம் பெறும் பெண் பயனாளிகளுக்கு கூடுதலான சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான சலுகைகள்
LIG,MIG,EWS ஐ சேர்ந்த பெண்கள், SC/ST/OBC பிரிவைச் சேர்ந்தவர்கள், துணையை இழந்த பெண்கள், திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
தவணை முறை நீட்டிப்பு
வீட்டு கடன் வட்டி விகிதம் மூலம் பெண்களுக்கான வட்டி சலுகைகளும் வழங்கப்படுகிறது.
PMAY-U 2.0 திட்டம் , பெண் பயனாளிகள் வீடு கட்டுதல், வாங்குதல் அல்லது மேம்படுத்துதல் பணிகளுக்காக கடன் பெறும் போது ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி சலுகைக்கு 8 லட்சம் கடனுக்கு தவணை ஆண்டுகளை 12 ஆண்டுகள் வழங்குகிறது.
வீடுகளுக்கான கடன் வரையறை
சமவெளியில் உள்ள வீட்டிற்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயும், மலைப்பகுதியில் உள்ள வீட்டிற்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் அடுத்த ஆண்டிற்குள் கர்நாடக அரசானது இரண்டு லட்சத்து முப்பதாயிரம் வீடுகளை கட்டிமுடிக்க திட்டமிட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான தகுதி
விண்ணப்பதாரர்களுக்கு சொந்த வீடு இருக்கக் கூடாது.
ஆண்டு வருமானம் ரூ. லட்சம் வரை தான் இருக்க வேண்டும்.
வருமான வரம்பின் அடிப்படையில் மானியமானது வழங்கப்படும்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருவாய் பிரிவு, மற்றும் நடுத்தர பிரிவினர்களுக்கு தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா PMAY-U 2.0 திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் அல்லது PMAY இணையதளம் pmaymis.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதில் உங்களின் குடும்ப விவரங்கள், வருமான விவரங்கள் முதலானவை கேட்கப்படும்.
ஆன்லைன் வசதி இல்லாத நபர்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ், இணைய சேவை மையங்கள் முதலானவற்றில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
ஆதார் கார்டு, பான் கார்டு, வருமான சான்று அதாவது மேலே குரிப்பிட்டுள்ள 4 நிலைகளில் எந்த நிலையைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்று, வங்கி விவரங்கள் முதலானவை.
விண்ணப்ப சரிபார்ப்பு
விண்ணப்பித்த பின்னர், நிலையை அறிவதற்கு (APPLICATION STATUS 2) அறிவதற்கு PMAY-U போர்ட்டல் அல்லது PMAY-G போர்ட்டலில் உங்கள் ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.
===