Railway sector jobs 2026 : Important announcement from the State Vocational Guidance Centre of the Government of Tamil Nadu Source : google
சிறப்புச் செய்திகள்

இலவச பயிற்சி,ரயில்வே வேலை இனி ரொம்ப ஈஸி:தேர்வர்களுக்கு குட் நியூஸ்

Railway sector jobs 2026 RRB Group D Apply Online 2026 : இளைஞர்களுக்காக தமிழ்நாடு அரசின் மாநில தொழில்முறை வழிகாட்டு மையம் முக்கிய அறிவிப்பு

S Kavitha

Railway sector jobs 2026 RRB Group D Apply Online 2026 : இளைஞர்களுக்காக தமிழ்நாடு அரசின் மாநில தொழில்முறை வழிகாட்டு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரயில்வேயில் 20,000 காலி பணியிடங்கள்

இந்திய ரயில்வே துறையில் குரூப் ’டி’ பிரிவில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

மாநில தொழில்முறை மையத்தின் முக்கிய அறிவிப்பு

ரயில்வே துறையில் பணி வாய்ப்பை பெற விரும்பும் இளைஞர்களுக்காக தமிழ்நாடு அரசின் மாநில தொழில்முறை வழிகாட்டு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலவச பயிற்சி

அதன்படி ரயில்வே துறையில் வேலை பெற குரூப் ’டி’ தேர்வை இந்த ஆண்டு எழுத, விண்ணப்பிக்க விரும்புகிறவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தது.

இந்த பயிற்சிக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பயிற்சி வழங்கப்படும் காலம்

இந்த பயிற்சியானது வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 1 மணி வரை வழங்கப்படுவதாக மாநில தொழில்முறை வழிகாட்டு மையம் தெரிவித்துள்ளது.

RRR GROUP D 2026 தேர்விற்கான பயிற்சியைப் பெற விரும்புகிறவர்கள் இப்பயிற்சியில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில தொழில்முறை பயிற்சி மையத்தின் முகவரி

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு. வி. க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600032.

தொலைபேசி எண் :

044-22500134, 9361566648.

இணையதள முகவரி:

https://employmentexchange.tn.gov.in/header.html.

RRR GROUP D 2026, விண்ணப்ப தேதி:

2026 ஜனவரி மாதம் 31 ஆம் தேதி(rrb group d apply online date 2026) முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மார்ச் 2 , 2026 விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். விருப்பமுடையவர்கள் அதற்குள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள் எண்ணிக்கை

22,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள்.

கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு, ஐஐடி

விண்ணப்பிக்கும் முறை

ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ https://www.rrbchennai.gov.in/ வலைதளத்தில் கொடுக்கபட்டுள்ள RRR GROUP D 2026 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, விண்ணப்ப கட்டணம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு நல்வாய்ப்பு

மாநில தொழில்முறை பயிற்சி மையம் வழங்கும் இந்த இலவச பயிற்சியானது வறுமை நிலையிலும் சாதிக்கத்துடிக்கும் இளைஞர்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் RRR GROUP D 2026 தேர்வில் வெற்றி பெறுவதற்கு நல்வாய்ப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.