RBI Gold Loan New Rules 2026 in Tamil : இந்திய மக்களைப் பொருத்தவரை தங்க நகை என்பது ஆபரணமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை.
தங்கம் என்பது அவர்களின் மிகப்பெரிய சேமிப்பு. அவசர காலங்களில் தங்கத்தை வைத்து , தங்க நகைக்கடன் பெற்று அந்த சூழ்நிலையை சமாளித்துவிடுவர்.
தங்க நகைக்கடன் வட்டிவிகிதம்
தங்க நகைகளை தனியார் நிறுவனங்களிலோ, அல்லது தங்களது வீட்டிற்கு அருகிலுள்ள கடைகளிலோ வைத்தால் அதிக வட்டி கட்ட வேண்டிய நிலைதான் உள்ளது.
அதனால் பெரும்பாலான சாமானிய மக்கள் வங்கிகளில் அடமானம் வைப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதிக வட்டிக்கு அடமானம்
எனினும் சில நேரங்களில் தனியார் நிறுவங்களிலும், கடைகளிலும் கொடுக்கும் பணத்தின் சதவீதத்தைப் பொறுத்தவரையில், வங்கியில் குறைவாகவே வழங்கப்படும்.
அதனால் அதி அவசர நேரங்களில் பணத்தின் தேவை சார்ந்து வீட்டின் அருகில் உள்ள கடைகளிலேயே அதிக வட்டிக்கு அடமானம் வைத்திவிடுவர்.
மக்களின் நிலையை உணர்ந்த RBI
சாமான்ய மக்களின் நிலையை உணர்ந்து RBI அவ்வபோது புதிய விதிமுறைகளை விதித்து வருகிறது. 2026 பிப்ரவரி நிலவரப்படி தற்போது RBI புதிய விதிமுறைகளை வழங்கியுள்ளது.
மேலும் இந்த புதிய விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்படும் என்றும் இந்த விதிமுறைகள் அனைத்தும் அனைத்து வங்கிகள் மற்றும் வங்கிசாரா தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
RBI புதிய விதிகள்
தங்க நகைகளுக்கு நிகரான கடன்தொகை வழங்க வேண்டும்.( Loan - To - Value )
LTV 75 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக உயர்வு .
கடன் தொகையை செலுத்திய 7 நாட்களுக்குள் நகை திரும்ப ஒப்படைத்தல்.
7 நாட்களுக்குள் நகையை திருப்பி கொடுக்காவிட்டால் ரூ. 5000 அபராதம்.
Loan - To - Value
Loan - To - Value அதிகரிப்பின் காரணமாக நீங்கள் 1 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை அடகு வைத்தால் 85,000 ரூபாய் வரை கடன் பெற முடியும்.
ஆனால் இதற்குமுன்பு 75,000 ரூபாய் தான் பெற முடியும். அதேபோல் ரூ. 2,50,000 முதல் 5 லட்சம் வரையிலான தங்க நகை கடன்களுக்கு 80 சதவீத தொகையும், 5 லட்சத்திற்கு மேற்பட்ட கடன்களுக்கு 75 சதவீத தொகையும் கடனாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
7 நாட்களுக்குள் நகை திரும்ப ஒப்படைத்தல்
நீங்கள் பெற்ற தங்க நகைக்கடனை முழுமையாக திருப்பி செலுத்திய பின் , வங்கியானது பணம் செலுத்திய ஏழு நாட்களுக்குள் உங்கள் நகையை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
அப்படி ஏழு நாட்களுக்குள் திரும்ப ஒப்படைக்கவில்லை என்றால், வங்கி தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளுக்கும் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை
நீங்கள் தங்க நகையை அடமானம் வைக்க செல்லும் போது, நகையின் தரம் மற்றும் எடை உங்கள் முன்னிலையிலேயே பரிசோதிக்கப்பட வேண்டும். வங்கி அலுவலர் தனியாக இவற்றை செய்யக்கூடாது.
வாடிக்கையாளருக்கு முன்னுரிமை
கற்கள் பொறித்த நகைகளாக இருந்தால் , கற்கள் தவிர்த்து நகையின் நிகர மதிப்பு மற்றும் மொத்த எடை சோதிக்கப்பட்டு 22 காரட் தங்கத்திற்கான நிகர மதிப்பை குறிப்பிட்டு வங்கி அலுவலர் வாடிக்கையாளருக்கு தர சான்றிதழ் வழங்க வேண்டும்.
மேலும் அந்த மாதத்தில் தங்கத்தின் சராசரி விலை, முந்தைய நாளின் இறுதி விலை, இதில் எது குறைவாக உள்ளதோ அந்த அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டும்.
இடைத்தரகர்களை தடுக்க
இடைத்தரகர்களின் மூலம் வங்கியில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்க்கவும் , தங்க நகைக் கடன் பெற்றுவிட்டு திரும்ப செலுத்தாமல் காலம் கடத்துதலை தவிர்க்கவும், Bullet Repayment முறையில் கடன் வாங்குபவர்கள் என முறைகேடுகளை தவிர்க்கும் வண்ணம் விதிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலமாக அவசர காலங்களில் பொதுமக்கள் சட்டப்பூர்வ பாதுகாப்புடன் தாராளமாக வங்கிகளில் அச்சமின்றி தங்க நகைக்கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
மகிழ்ச்சியில் பொதுமக்கள்
RBI விதித்துள்ள புதிய விதிகளால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனென்றால், வங்கியில் தங்கத்திற்கு குறைவான வட்டி இருந்தாலும் பணம் பெறும் சதவீதம் குறைவாகத்தான் இருக்கும் .
அதனால் அதிக வட்டி இருந்தாலும் பரவாயில்லை என தனியார் நிறுவங்களிலோ அல்லது கடைகளிலோ வைத்து, அதிக வட்டிக்கு தங்களுக்கு தேவையா பணத்தைப்பெற்றுக்கொள்ளும் நிலை இருந்தது.
ஆனால் தற்போது வங்கியில் 1 லட்சம் மதிப்பிற்கு 85% பணம் பெற்றுக்கொள்ளலாம் என்ற RBI -ன் புதிய விதி மக்களை நிம்மதியடைய வைத்துள்ளது.
====