ring of fire solar eclipse 2026 google
சிறப்புச் செய்திகள்

நெருப்பு வளைய சூரிய கிரகணம் : பிப்.17ல், இந்தியாவில் தெரியுமா!

விண்கல், எரி நட்சத்திரம், சந்திர - சூரிய கிரகணங்கள் வானில் பல்வேறு அறிய நிகழ்வுகள் நடைபெறுவது இயல்பான வழக்கமான ஒன்று . அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பிப்ரவரி 17ஆம் தேதி நிகழ்கிறது.

Rohini

சூரிய கிரகணம் எவ்வாறு நிகழ்கிறது

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

அப்போது நிலவு சூரியனின் மீது விழும் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைத்து பூமி மீது ஒரு நிழலை உருவாக்கும் இதுவே சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது

பொதுவாக ஒருவருடத்திற்கு 2 முதல் 5 முறை சூரிய கிரகணம் நிகழ்வு ஏற்படும்.

நெருப்பு வளைய சூரிய கிரகணம்

இந்த வலைய சூரிய கிரகணம், ‘நெருப்பு வளையம்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

நிலவு சூரியனின் முன் வந்து அதன் மையப் பகுதியை மறைக்கும் போது, சூரியன் முழுமையாக மறையாமல், நிலவைச் சுற்றி பிரகாசமான ஒளிவட்டம் தென்படுகிறது .

இந்த நிகழ்வு பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் தென்படும் . மேலும் இந்த நிகழ்வின் போது, முழு சூரிய கிரகணத்தைப் போல, வானம் முற்றிலும் இருள் அடையாமல், பகல்நேர ஒளி தொடர்ந்தபடி இருக்கும்.

இந்நிகழ்வை இந்தியாவில் காண முடியுமா?

இந்த நெருப்பு வளைய காட்சியினை அதிகபட்சமாக 2 நிமிடங்கள் 20 வினாடிகள் மட்டுமே காண முடியும் என்றும் ,இந்த நிகழ்வை தென்னாப்பிரிக்கா, தெற்கு அர்ஜென்டினா மற்றும் அண்டார்டிகாவில் மட்டுமே காண முடியும்.

இந்தியாவில் அதற்கான சாத்தியக்கூறு இல்லை என்றும் ,சிறு தாக்கத்தை மட்டும் ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கலாச்சார ரீதியாகவும் தொடர்புடையது

சூரிய கிரகணங்கள் அறிவியல் ரீதியாக மட்டுமல்லாமல் கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இந்தியாவில் பார்க்கப்பட்டு வருகிறது

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்

அந்த வகையில் இந்த சூரிய கிரகணம் நிறைவு பெற்ற பிறகு பிப்ரவரி 18ஆம் தேதி அன்று சீனாவில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

அதேபோல இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாத நோன்பு இந்த பிறைக்கு பின்னதாகவே தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது .

அடுத்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் எப்போது நிகழும்

2027 ஆம் ஆண்டிற்கான இந்த நிகழ்வு பிப்ரவரி 6ம் தேதி தோன்றும். குறிப்பாக இதனை சிலி , அஜென்டினா, உருகுவே, பிரேசில், கானா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.