Southern Railway Announcement Summer Special Trains 2026 From Chennai To Tirunelveli Train Date full details  source : google
சிறப்புச் செய்திகள்

கோடைக்கால சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு! : விரைவில் அட்டவணை...

Southern Railway Announced Summer Special Trains 2026 : இதற்கான நேர அட்டவணை, முன்பதிவு விவரங்கள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

S Kavitha

Summer Special Trains 2026, Southern Railway Announcement!

கோடை விடுமுறையில் சொந்த ஊர் செல்லும் மக்கள் வசதிக்காக தெற்கு ரயில்வே கோடைக்கால சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வு

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகிறது. தொடர்ந்து சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள்

அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகள், சட்டமன்ற தேர்தலை ஒட்டி முன்கூட்டியே நடத்தப்படுகின்றன. இதற்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஆண்டுத்தேர்வு அட்டவணை

அதில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை வகுப்பு வாரியாக தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும். இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் 17 ஆம் தேதி கோடை விடுமுறை தொடங்க உள்ளது.

கோடை விடுமுறை மற்றும் சட்டமன்ற தேர்தல்

கோடை விடுமுறை மற்று சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக தற்போது விருதுநகர், திருவண்ணாமலை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நோக்கி சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதற்கான நேர அட்டவணை, முன்பதிவு விவரங்கள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி To சென்னை எழும்பூர்

ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் ஜூன் 11 ஆம் தேதி வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழுப்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை எழும்பூர் To திருநெல்வேலி

அதேபோல் ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை சிறப்பு ரயில் இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் விருதுநகர், மானாமதுரை,காரைக்குடி,திருச்சி, விருதாச்சலம், மதுரை வழியாக செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி To தாம்பரம் ( இரு மார்க்கத்திலும்)

ஏப்ரல் 12 ஆம் தேதி முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் வரையும், அதேபோல் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ஜூன் 8 ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்கட்கிழமையிலும் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த ரயில்களும் விருதுநகர், மதுரை,திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் வழியாக செல்லும்.

சென்னை சென்ட்ரல் To தூத்துக்குடி

ஏப்ரல் 13 முதல் ஜூன்8 ஆம் தேதி வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

அதேபோல் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஜூன்9 ஆம் தேதி வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

24 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சேலம்,ஜோலார்பேட்டை வழியாக செல்லும்.

இந்த கோடைக்கால சிறப்பு ரயில்களுக்கான நேர அட்டவணை, முன்பதிவு விவரங்களை தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

======