Supreme Court Judgment Ancestral Property Grandson Rights source: ai generated
சிறப்புச் செய்திகள்

தாத்தாவின் சொத்தில் பேரன் உரிமை கோர முடியாது: சொத்துரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

தந்தைக்குத் தாத்தா பிரித்துக் கொடுத்த சொத்தில் பேரன் உரிமை கோர முடியாது என 29 ஆண்டுகால வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு அளித்துள்ளது.

Kavitha prasanna

Supreme Court Judgment Ancestral Property Grandson Rights

உச்ச நீதிமன்றத்தின் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

ஒருவர் தனது தந்தையின் பரம்பரை சொத்து அல்லது தானே சுயமாக சம்பாதித்த சொத்துக்கு மட்டுமே முழு உரிமையாளராக இருக்க முடியும் என்றும், அந்தச் சொத்துகளைத் தன்னுடைய மகன்களுக்குக் கொடுக்காமல் தானே வைத்துக்கொள்ளவும் உரிமை உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாத்தா அப்பாவிற்கு கொடுத்த சொத்தில் மகன் உரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஒருவர் தனது தந்தையின் பரம்பரை சொத்து அல்லது தான் சுயமாக சம்பாதித்த சொத்துகளை மட்டுமே முழு உரிமையாளராக இருக்க முடியும் என்றும், அந்த சொந்துகளைத் தன்னுடைய மகன்களுக்கு கொடுக்காமல் தானே வைத்துக்கொள்ளவும் உரிமை உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

தனது தந்தையின் சொத்தில் உரிமை கோரி, அவருடைய மகன் தொடர்ந்த வழக்கில் கிட்டத்தட்ட 29 ஆண்டுகால சட்டப்போராட்டத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.

29 ஆண்டுகால சட்டப் போராட்டம்

தன்னுடைய தந்தைக்குப் பரம்பரைச் சொத்திலிருந்து கிடைத்த பங்கில் உரிமை கோரி, மகன் ஒருவர் கடந்த 1997-ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார்.

தனது தந்தைக்கு கிடைத்த பரம்பரை சொத்திலிருந்து கிடைத்த பங்கில் தனக்கும் உரிமை வேண்டும் என்று மகன் ஒருவர் கடந்த 1997 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகனின் மகன், பரம்பரை சொத்தில் நேரடியான பங்குதாரராக இருக்க முடியாது என்றும், தந்தைக்கு தாத்தா பிரித்துக் கொடுத்த சொத்தில் பேரனால் உரிமை கோர முடியாது என்றும் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

வாரிசுரிமை சட்டப்பிரிவு 8-ன் விளக்கம்

இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய சொத்துகள் பற்றி உயில் எழுதாமல் இறக்கும்பட்சத்தில், வாரிசுரிமை விதிகளை வரையறுக்கும் சட்டப்பிரிவு 8-ஐ நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அதன்படி, ஒரு மகன் தனது தந்தையிடமிருந்து பெறப்பட்ட சொத்தின் முழு உரிமையாளராக மாறுகிறார். எனினும் அதே வேளையில் அவனது சொந்த மகனுக்கு (பேரனுக்கு) அந்தச் சொத்தின் மீது எந்த உரிமையும் இல்லை.

நேரடியான வாரிசுரிமை என்பது மகனை மட்டுமே குறிக்கும். மகனின் மகனை எந்த வகையிலும் வாரிசுரிமை பெற்றவர் எனக் குறிப்பிட முடியாது. எனவே, தாத்தாவின் சொத்தில் பேரன் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

==============