TNPSC Group2 Group 2A தேர்வுகள்
TNPSC Group 2, 2A Mains Exam Fees Last Date Extension : TNPSC குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகளுக்கான கட்டணத்தைச் செலுத்தாத தேர்வர்களுக்கு மார்ச் 5-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 5 வரை கூடுதல் அவகாசம்
TNPSC குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்தத் தவறிய தேர்வர்களுக்கு மார்ச் 5-ஆம் தேதி இரவு 11:59 மணி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரமங்களை எதிர்கொண்ட தேர்வர்கள்
கடந்த 25 ஆம் தேதி வெளியான சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையைத் தொடர்ந்து தேர்வு கட்டணம் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்ட குறிப்பிட்ட தேர்வர்களுக்கு மட்டும் இந்த மறுவாய்ப்பு வழங்கப்படுவதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு
ஏற்கனவே முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றும், தொழில்நுட்பக் கோளாறு அல்லது பிற காரணங்களால் கட்டணம் செலுத்தத் தவறிய தேர்வர்களுக்கு இது ஒரு மறுவாய்ப்பாக வழங்கப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்விற்கு தகுதி பெற்ற தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட காலக் கெடுவிற்குள் ரூ 200 செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்வர்களின் கோரிக்கை
இதையடுத்து தேர்வர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று தற்போது அவர்களுக்கு கால அவகாசத்தை நீட்டித்து உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கடைசி நேரத்தில் ஏற்படக்கூடிய தொழிநுட்பக் கோளாறுகளைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே கட்டணத்தை செலுத்துவது நல்லது என்றும் தெரிவித்துள்ளது.
தேர்வு கட்டணம் செலுத்தும் முறை
தேர்வர்கள் தங்களது நிரந்தரப் பதிவு (OTR) வாயிலாக ஆன்லைனில் இந்தத் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
மார்ச் 5-ஆம் தேதிக்குள் TNPSC-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் உங்கள் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.
முன்னதாக நடந்தவை
இந்த தேர்விற்கான முதன்மைத் தேர்வு கடந்த எட்டாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தேர்வர்களுக்கான மையங்கள் ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மார்ச் 15 ஆம் தேதி தேர்வு
இதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான முதன்மைத் தேர்வின் இரண்டு தாள்களான தொகுதி 2 மற்றும் 2ஏ க்கான தமிழ் தகுதித்தேர்வு மார்ச் 15ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கூடுதல் அவகாசம்
இந்த நிலையில் தான் தேர்வாணையம் ஐகோர்ட்டின் உத்தரவின்படி தேர்வர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.