WhatsApp Disappearing Messages After Reading WhatsApp's new feature will automatically delete messages after 15 minutes google
சிறப்புச் செய்திகள்

”After Reading” : 15 நிமிடங்களில் மெசேஜ்கள் தானாகவே அழியும்! : வாட்ஸ் அப்-ன் புதிய அம்சம்!

WhatsApp Disappearing Messages After Reading : 15 நிமிடங்களில் மெசேஜ்கள் தானாகவே அழியும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Rohini

மெசேஜ்கள் தானாகவே அழியும்: After Reading முறை

WhatsApp Disappearing Messages After Reading : After Reading எனப்படும் இந்த வசதி, ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டு படிக்கப்பட 15 நிமிடங்களுக்குள் தானாகவே அழியும் வகையில் வாட்ஸ் அப் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு

இந்த புதிய அம்சம் மிகவும் குறுகிய நேரத்தில் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுளது.

முக்கியமான தகவல்களை பகிரும் போது , கடவுச்சொல் ,ஒடிபி போன்ற முக்கியனமானவற்றை பகிரும்போது இந்த முறை பயனர்களின் பாதுகாப்பை இது உறுதி செய்யும் வகையில் அமைக்கப்ட்டுள்ளது

disappearing messages டு After Reading

அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி திறக்கப்படாமல் இருந்தால், அது 24 மணிநேரத்தில் தானாகவே அழிந்து விடும்,தற்போதுள்ள disappearing messages அம்சத்தில் 24 மணிநேரம், 7 நாள், 90 நாள் போன்ற கால அளவு இடைவெளி உள்ள நிலையில்,

இந்த After Reading புதிய அம்சம் மிகவும் குறுகிய நேரத்தில் தனியுரிமை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளளது.