Zoho founder Sridhar Vembu shares 10 jobs where AI is not a threat  Source : ZOHO
சிறப்புச் செய்திகள்

ஏஐ அச்சுறுத்தல் இல்லாத 10 வேலைகளை பகிர்ந்தார் ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு!

இன்றைய நவீன சூழலில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் வேலை வாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஐ அச்சுறுத்தல் இல்லாத 10 வேலைகள் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பட்டியலிட்டுள்ளார்

Rohini

இது குறித்து ஸ்ரீதர் வேம்பு கூறியிருப்பது

ZOHO Founder Sridhar Vembu Suggested Jobs : அதிகளவிலான சம்பளம் ஈட்டுவதை காட்டிலும் மனிதர்களை மையமாக கொண்ட பணிகளை அவர் பட்டியலிட்டுள்ளார். ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் தாயகம் வர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஏஐ-யால் ஏற்படும் தாக்கம்

ஏஐ தாக்கத்தால் ஐடி துறையில் பணிபுரிபவர்கள் பெரும் பணியிழப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில் தற்போது இக்கருத்தை ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

நாம் பொருளாதார மதிப்பை சுயமதிப்போடு இணைத்து பார்த்தால் ஏஐ காலத்தில் நெருக்கடியாக இருக்கும்

நாம் சேர்க்கின்ற பொருளாதார மதிப்பை நமக்கான சுயமதிப்போடு இணைத்து பார்த்தால் இன்றைய ஏஐ காலத்தில் அது பெரிய நெருக்கடியாகவே அமையும் என்று தெரிவித்தார்.

மறுபக்கம் பார்த்தால் குழந்தைகளை கவனித்து கொள்ளுதல் .அவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்தால் , மற்றும் வீட்டில் முதியவர்களை கவனித்து கொள்ளுதல் போன்ற பெரிய சம்பளம் கொடுக்கும் பணியை விடுத்து விவசாயத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளவது

மற்றும் , சிறிய அளவிலான பார்வையாளர்கள் இருந்தாலும் அவர்கள் முன் இசைப்பது போன்ற செயல்களை மேற்கொள்ள யாரும் முன்வருவதில்லை. ஏனெனில், இந்த செயல்களுக்காக யாரும் உங்களுக்கு அதிக சம்பளம் தருவதில்லை என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.

ஏஐ-யால் பாதிப்பு ஏற்படா வேலைகள்_ஸ்ரீதர் வேம்பு

இந்த செயல்களில் ஈடுபடுபவர்கள் ஏஐ-யால் பாதிக்கப்பட மாட்டார்கள். மனிதகுலம் அத்தகைய செயல்பாட்டுக்கு தன்னைத்தானே ஒழுங்கமைத்துக் கொள்ளலாம்.என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அவரது இந்த சமூக வலைதள பதிவுக்கு பயனர்கள் பலரும் கருத்துக்களை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.