102 year old woman from Kerala climbed 18 steps at Sabarimala for the third time and darshan Ayyappan 
ஆன்மிகம்

சபரிமலையில் 18 படியேறி தரிசனம் : 102 வயதில் சாதித்த ’பாருக்குட்டி’

கேரளாவை சேர்ந்த102 வயது மூதாட்டி ஒருவர், மூன்றாவது முறையாக சபரிமலையில் 18 படிகளில் ஏறிச்சென்று ஐயப்பனை தரிசித்தார்.

Kannan

சபரிமலை ஐயப்பன் கோவில்

102 year old woman Parukutty Amma from Kerala climbed 18 steps at Sabarimala for the third time and darshan Ayyappan : சபரிமலையில் மண்டல பூஜை இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதுவரை 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருமுடி கட்டி வந்து ஐயப்பனை வழிபட்டு இருப்பதாக தெரிகிறது.

மண்டல பூஜைகள்

வரும் 27ம் தேதி மண்டல பூஜை விழா நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடைபெறும். இதன்பிறகு கோவில் நடை சாத்தப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக பின்னர் நடை திறக்கப்படும்.

பேரனால் சபரிமலைக்கு சென்றார்

இந்தநிலையில், கேரள மாநிலம், வயநாடு, மீனங்காடி பகுதியைச் சேர்ந்த பாருக்குட்டி, 2023ல் நுாறாவது வயதை கொண்டாடிய போது, அவருடைய பேரன்களில் ஒருவர் சபரிமலைக்கு அழைத்தார்.

102 வயதிலும் ஐயப்ப தரிசனம்

வாழ்வில் ஒருமுறை கூட சபரிமலை போகாத பாருக்குட்டி, பேரனின் அழைப்பை ஏற்றுக்கொண்டு மாலையிட்டு விரதமிருந்து முதல் முறையாக சபரிமலை சென்றார். கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக வந்த பாருக்குட்டி, இந்தாண்டு மூன்றாவது முறையாக அய்யப்பனை தரிசிக்க சபரிமலை வந்தார். பேரன்கள் மற்றும் உறவினர்கள் உட்பட 12 பேர் அவர் வந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

18 படியேறி தரிசனம்

102 வயதில் ஏற்பட்டுள்ள உடல் தளர்ச்சியால் இவர், பம்பையில் இருந்து டோலியில் வந்தார். பின்னர், அங்கு பணியில் உள்ள போலீசாரின் உதவியுடன் 18 படிகள் ஏறி, அய்யப்பனை தரிசனம் செய்தார்.

திரைப்படத்தில் நடித்தவர் பாருக்குட்டி

102 வயது மூதாட்டி பாரூவின், பக்தி சபரிமலைக்கு வந்த பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அவரோடு செல்பி எடுக்க பலர் ஆர்வம் காட்டினர். கேரள மாநிலம் ஏற்றுமானுாரைச் சேர்ந்த தேஜஸ் இயக்கிய, ருத்திரன்றே நீராட்டு என்ற மலையாள திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். போதைப் பொருட்களுக்கு எதிரான முக்கிய தகவலை சொல்பவராக பாருக்குட்டி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

========