Andhra Pradesh Government Form Investigation Commission For Adulteration Ghee At Tirupati Laddu Issue Update in Tamil Source : SVBC TTD TV
ஆன்மிகம்

கலப்பட நெய் லட்டு விவகாரம் : விசாரணை குழு அமைக்கும் ஆந்திர அரசு

Tirupati Laddu Issue Update : ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆடசியில் (2019-2024), குற்றம் சாட்டப்பட்ட லட்டு விவகாரத்திற்கு விசாரணை கமிஷன் அமைகிறது ஆந்திர அரசு

Rohini

தெலுங்கு தேசம் குற்றச்சாட்டு

Tirupati Laddu Issue Update in Tamil : ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆடசியில் (2019-2024), திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு கலப்படம் இருப்பதாக கூறி கடந்த 2024-ஆம் ஆண்டு மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினாா்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

இந்த விவகாரம் தொடா்பாக 15 மாதங்கள் விசாரணை மேற்கொண்ட சிபிஐ-எஸ்ஐடி (CBI SIT ) திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்தது.

லட்டில் தரம் குறைந்த பொருட்கள்

மாறாக தரம் குறைந்த நெய், பாமாயில் உள்ளிட்டவை மூலம் திருப்பதி லட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சிறப்பு புல​னாய்வு குழு

லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்க பட்ட விவகாரத்தில் அதனை விசாரணை செய்ய சிறப்பு புல​னாய்வு குழுவை அமைக்க வேண்டும் என ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸார் உச்ச நீதிமன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இதனை தொடர்ந்து சிபிஐ அதி​காரி​கள் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்வு குழு அமைக்கப்பட்​டது.

புல​னாய்வு குழுவின் நடவடிக்கை

இந்த சிறப்பு புல​னாய்வு குழு, இது​வரை 14 பேரை கைது செய்துள்ளது. இவர்​கள் அனை​வரை​யும் நெல்​லூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்​றும் சிபிஐ நீதி​மன்​றங்​களில் ஆஜர் படுத்​தி​யது. இதில் பல்​வேறு பால் உற்​பத்தி நிறு​வனத்தை சேர்ந்​தவர்​கள் உள்​ளனர். மேலும், ஏ-34 குற்​ற​வாளி​யாக திருப்​பதி தேவஸ்​தான அதிகாரியான விஜய​பாஸ்​கர் ரெட்டி கைது செய்​யப்​பட்​டார்.

திருப்​பதி தேவஸ்​தான அதிகாரியின் வாக்குமூலம்

புல​னாய்வு குழு​வுக்கு கொடுத்த வாக்​கு மூலத்தில், “கலப்​படம் செய்த நெய்யை பரிசோதனை செய்​ததும் அதில் கலப்​படம் உள்​ளது என்​பதை அறிந்​தேன்.

இதனை அந்​தந்த நிறு​வனங்​களுக்கு எடுத்​துக் கூறினேன். ஆனால், அவர்​கள், எனக்கு லஞ்​சம் கொடுத்து நெய்யை தொடர்ச்​சி​யாக விநி​யோகம் செய்து வந்​தனர்.

இதன் மூலம் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு ரூ.118 கோடி நஷ்டம் ஏற்​பட்​டது. 2023-ல் போலே பாபா நெய் நிறுவனத்தில் இருந்து ரூ.75 லட்​சம், பிரீமியர் நிறு​வனத்​தில் இருந்து ரூ.8 லட்​ச​மும் லஞ்​ச​மாக வாங்​கினேன்" என வாக்​கு மூலம் அளித்​தார்.

அமைகிறது விசாரணை குழு

இந்நிலையில் நேற்று அமராவ​தி​யில் முதல்வர் சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில் நடை​பெற்ற அமைச்சரவை குழு​வில் நடந்த கூட்டத்தில் கலப்பட நெய் விவ​காரம் குறித்து சரிவர புல​னாய்வு விசா​ரணை நடக்க வில்லை என்​ப​தால், உண்​மை​யான குற்​ற​வாளி யார் என விசா​ரிக்க விரை​வில் விசா​ரணை கமிஷன் அமைக்​க ஒரு​ மன​தாக தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டுள்​ளது.

இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் ஒரு பெரும் சர்ச்சையும் பெரும் பேசும் விவகாரமாவும் மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .