Ash Wednesday 2026 : The Christian season of Lent has begun here is Ash Wednesday 2026 Date and Day in Tamil source: google
ஆன்மிகம்

சாம்பல் புதன் : ”மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய் மண்ணுக்கு திரும்புவாய்” : கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது!

Ash Wednesday 2026 Date and Day in Tamil : ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் நாற்பது நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர். அதன் தொடக்க நாள் தான் இந்த சாம்பல் புதன்.

S Kavitha

தவக்காலம் தொடங்கியது:

Ash Wednesday 2026 Date and Day in Tamil : மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கு திரும்புவாய் மறவாதே என்றும் மறவாதே... மனிதனே! இன்று கிறிஸ்தவர்கள் அனைவரின் உள்ளங்களிலும் இந்த பாடல் தான் ஒலித்துக்கொண்டிருக்கும்.

ஆம். இன்று சாம்பல் புதன் . கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று முதல் தொடங்குகிறது.

சாம்பல் புதன்

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினம் தான் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஈஸ்டர் பெருநாளை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் நாற்பது நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர். அதன் தொடக்க நாள் தான் இந்த சாம்பல் புதன்.

விவிலியம் சொல்லும் உண்மை :

விவிலியத்தின் முதல் பகுதியில், தொடக்க நூலின் நீ மண்ணாக இருக்கிறாய் மண்ணுக்குத் திரும்புவாய் என்னும் இறை வார்த்தைகளை நினைவு கூறும் விதமாகத் தான் சாம்பல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

தவக்காலத்தின் மகிமை:

மண்ணுக்கு வந்த மனிதன் மீண்டும் மண்ணுக்கே திரும்புவது தான் நியதி என்பதை உணர்த்தி இந்த இடைப்பட்ட காலத்தில் யாருக்கும் பாவங்கள் செய்யாதிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த தவக்காலத்தின் மகிமை.

குருத்தோலை ஞாயிறு :

ஒவ்வொரு ஆண்டும் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படும். அன்று தென்னங் கீற்றுகளுடன் இறைமக்கள் ஊர்வலமாக சென்று இயேசு கிறிஸ்துவை வழிபட்டு பின்னர் அந்த தென்னங் கீற்றுகள் ஆலயத்தில் ஒப்படைக்கப்படும்.

புனித சாம்பல்

பொதுவாக முந்தைய குருத்தோலை ஞாயிறு தினங்களில் பெறப்பட்ட தென்னங் கீற்றுகள் வழிபாட்டில் வைக்கப்பட்டு, சாம்பலாக்கப்படும்.

கிறிஸ்துவின் மரணத்தின் அடையாளமாக:

சாம்பல் புதன் அன்று பாதிரியார்கள் அந்த சாம்பலுடன் புனித எண்னெய் கலந்து இறை மக்களின் நெற்றியில் சிலுவை வடிவில் பூசுவர். இது மனம் திரும்புதல், இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் அடையாளமாக பூசப்படுகிறது.

எதற்காக நாற்பது நாள் தவக்காலம்

இயேசு கிறிஸ்து 40 நாட்கள் வனாந்திரத்தில் அனுபவித்த பாடுகளை நினைவு கூரும் விதமாகத்தான் இந்த தவக்காலம் அனுசரிக்கப்படுகிறது.

தவக்கால விரதம் :

இந்த தவக்காலத்தின் போது கிறிஸ்தவர்கள் முட்டை, இறைச்சி முதலாவற்றை தவிர்த்து விரதமிருக்கின்றனர். முடியாதவர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மட்டுமாவது விரதமிருக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு:

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை நேரத்தில் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு, ஆராதனை, சிலுவைப்பாடு நடத்தப்படும். அதில் இயேசு கிறிஸ்து அடைந்த துன்பங்களை 12 நிலைகளாக சிலுவை சுமந்து , ஜெபம் செய்து கிறிஸ்தவர்கள் வழிபடுவர்.

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தவக்காலத்தின் போது திருமணம் முதலான எந்த நல்ல நிகழ்வுகளையும் செய்ய மாட்டார்கள். ஈஸ்டர் முடிந்தவுடன் முதல் வாரத்தில் தான் தொடங்குவார்கள்.

இயேசு நம் இல்லத்தில் ஒருவர், நமக்கானவர் . உலக மக்களுக்காக சிலுவையை சுமந்தவர். அதனால் அவரது மரண பாடுகளின் போது நாமும் அவரோடு பயணிக்க வேண்டும் என்பதையே இந்த தவக்காலம் எடுத்துரைக்கிறது.

தவக்கால வழிபாடு யாருக்கெல்லாம்

கிறிஸ்தவத்தில் பல பிரிவுகள் உள்ளது. அவர்களுக்குள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் , லூத்தரன்கள், மெதடிஸ்டுகள், ஆங்கிலிகன்கள், புராட்டஸ்டண்ட்- களில் சிலர் இந்த தவக்கால வழிபாடு செய்கின்றனர்.

ஈஸ்டர் தினம் 2026 :

இந்த வருடம் ஈஸ்டர் பெருநாள் ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை(Easter 2026 Date in Tamil) வருகிறது. அன்றைய தினம் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு, திருப்பலி முதலானவை நடைபெறும். அந்தந்த ஆலயங்களில் ஈஸ்டர் எஃக் வழங்கப்படும்.

கிறிஸ்து பிறப்பு நாளான கிறிஸ்துமஸ் பண்டிகையைப்போல ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கிறிஸ்தவ பெருமக்கள் மட்டுமின்றி பிற மதத்தைச் சேர்ந்த மக்களும் ஆலயங்களில் நடைபெறும் திருப்பலியில் கலந்துகொண்டு கோலாகலமாக கொண்டாடி மகிழ்வர்.