சபரிமலை ஐயப்பன் கோவில்
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற கோவில் சபரிமலை ஐயப்பன் தேவஸ்தானம். மற்ற கோவில்களை போன்று இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது கிடையாது.
மாலை அணிந்து வரும் பக்தர்கள்
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள்.
சபரிமலை கோவில் நிகழ்வுகள்
ஒவ்வொரு மாதத்தின் முதல் 5 நாட்களும் நடை திறக்கப்படுவது வழக்கம். ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும்.
இதில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அலைமோதும் ஐயப்ப பக்தர்கள்
ஒவ்வொரு சீசன் நேரங்களிலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்புக்காக கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பக்தர்களின் வசதிக்கேற்ப போக்குவரத்து ஏற்பாடுகள், கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன்லைன் புக்கிங் போன்ற வசதிகள் இருக்கின்றன.
சபரிமலையில் ஏஐ தொழில்நுட்பம்
இந்த நிலையில் சபரிமலையில் பக்தா்களின் கூட்டத்தை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். எண்ம அமைப்பு முறைகளின் பயன்பாடு விரிவுபடுத்தப்படும்.
பண பரிவர்த்தனை முற்றிலும் நிறுத்தம்
அதேபோன்று, பண பரிவர்த்தனை முழுமையாக தடை செய்யப்படும். இணைய வழி கையாளகள் மூலமே பரிவர்த்தனைகள் முன்னெடுக்கப்படும். நிா்வாக ரீதியிலும் டிஜிட்டல் மயமாக்கல் விரிவுபடுத்தப்படும்.
சுகாதார பிரச்னைக்கு தீர்வு
நிலக்கல், பம்பை, மரக்கூட்டம், சந்நிதானம் பகுதிகளில் நிகழ் நேர அடிப்படையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஏ.ஐ. அடிப்படையிலான வழிமுறையை உருவாக்குவதே நோக்கமாகும். சபரிமலையில் சுகாதார பிரச்னைகளுக்கும் விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
=====