Chitra Pournami 2026:Tamil Nadu Government Announces 1,000 Additional Special Buses! Source: Ai Generated
ஆன்மிகம்

சித்ரா பௌர்ணமி 2026 : திருவண்ணாமலைக்கு படையெடுக்கும் பக்தர்கள் : 1,000 கூடுதல் பேருந்துகளை அறிவித்த தமிழக அரசு!

சித்ரா பௌர்ணமி சிறப்புப் பேருந்துகள் 2026! திருவண்ணாமலை செல்ல சிறப்பு ஏற்பாடு.

Kavitha prasanna

Chitra Pournami 2026:Tamil Nadu Government Announces 1,000 Additional Special Buses!

சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால், பயணிகளின் வசதிக்காகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கிரிவலம் தேதி, நேரம் மற்றும் முன்னேற்பாடுகள்

சித்ரா பௌர்ணமி கிரிவல வரும் ஏப். 30 ஆம் தேதி வியாழக்கிழமையன்று இரவு 9.50 மணி முதல் வெள்ளிக்கிழமை (மே 1) காலை 11.07 மணி வரை நடக்கிறது.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

எனவே ஏப்ரல் 30 முதல் மே 2 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருவண்ணாமலைக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கத்தில் இருந்து

குறிப்பாக கிளம்பாக்கம் (KCBT பேருந்து நிலையத்தில் இருந்து ஏப்ரல் 30 ஆம் தேதி 548 பேருந்துகளும், மே 1- ஆம் தேதியன்று 565 பேருந்துகளும், மே 2 ஆம் தேதி 35 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பேருந்து வசதிகள்

மற்ற பேருந்து நிலையங்களான மாதவரம், அடையார் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்தும் கூடுதல் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதியுடன் சொகுசுப் பேருந்துகள்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) சார்பில், மே 1-ம் தேதி அன்று மட்டும் குளிர்சாதன வசதியுடன் கூடிய 40 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மதுரை, சேலம், கோவை, நெல்லை, நாகர்கோவில் ஆகிய முக்கிய நகரங்களிலிருந்தும் திருவண்ணாமலைக்கு நேரடி சேவைகள் இருக்கும்.

முன்பதிவு செய்துகொள்ளும் வசதி

சித்ராபௌர்ணமியின் போது நெரிசலைத் தவிர்க்க பயணிகள் TNSTC இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பயணிகளின் வசதிக்காக 24 மணிநேரக் கட்டுப்பாட்டு அறை மற்றும் உதவி மையங்களும் பேருந்து நிலையங்களில் செயல்படும்.

பேருந்து நிலையங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பயணிகளுக்கு உதவவும் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

=====