color-coded entry passes issued for witnessing Meenakshi Amman Temple consecration ceremony  source:thamizhalai,ai generated
ஆன்மிகம்

”7 நிறங்களில் அனுமதி அட்டை, பொதுமக்களுக்கு சிறப்பு ஏற்பாடு” : மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், ஜொலிக்கும் மதுரை..!

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நேரில் காண 7 வண்ணங்களில் அனுமதி அட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் எப்போது தரிசிக்கலாம் என்ற விவரமும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

Kannan

17 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்

Madurai meenakshi amman kumbabishegam 2026 : 17 ஆண்டுகளுக்குப் பிறகு 17ம் தேதி வியாழக்கிழமை அன்று மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

முழுவீச்சில் ஏற்பாடுகள்

இதற்காக மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேக வேலைகள், பாதுகாப்பு வசதிகள், பக்தர்களுக்கான வழிமுறைகள் போக்குவரத்து வசதிகள் கணக்கிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பக்தர்களுக்கு 7 நிறங்களில் அனுமதி அட்டைகள்

கோவில் கும்பாபிஷேகத்தை தரிசனம் காண்பதற்கு 7 வண்ண அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன

பழுப்பு நிற அனுமதி அட்டை : வடக்கு சித்திரை வீதியில் கிழக்கு பகுதியில் இருந்து வடக்கு கோபுரம் வழியாக சுவாமி சன்னதி கிழக்கு பகுதி மேல்தளம் செல்ல வேண்டும்.

இளம் சிவப்பு அனுமதி அட்டை : கிழக்கு சித்திரை வீதியில் தெற்கு பகுதியில் இருந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாக மீனாட்சி நாயக்கர் மண்டபம் மேல் தளத்திற்கு செல்ல வேண்டும்.

ஊதா நிற அனுமதி அட்டை : தெற்கு சித்திரை வீதியில் மேற்கு பகுதியில் இருந்து தெற்கு கோபுரம் வழியாக பொற் தாமரை குளம் பகுதி மேல்தளத்திற்கு செல்ல வேண்டும்.

கருநீல நிற அனுமதி அட்டை : கிழக்கு சித்திரை வீதியில் வடக்கு பகுதியில் இருந்து கிழக்கு ராஜ கோபுரம் வழியாக ஆயிரம் கால் மண்டபம் மேல் தளத்திற்கு செல்ல வேண்டும்.

பச்சை நிற அனுமதி அட்டை : கிழக்கு சித்திரை வீதியில் வடக்கு பகுதியில் இருந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாகவும் மீனாட்சி அம்மன் தங்க விமான இடத்திற்கு செல்ல வேண்டும்.

மஞ்சள் நிற அனுமதி அட்டை : வடக்கு சித்திரை வீதியில் மேற்கு பகுதியில் (முக்காவூர் சன்னதி) இருந்து வடக்குகோபுரம் வழியாக சுந்தரேஸ்வரர் தங்க விமானம் செல்ல வேண்டும்.

சிவப்பு நிற அனுமதி அட்டை : மேற்கு சித்திரை வீதியில் வடக்கு பகுதியில் இருந்து மேற்கு கோபுரம் வழியாக சுவாமி சன்னதி மேற்கு பகுதி மேல் தளத்திற்கு செல்ல வேண்டும்.

மஞ்சள் நிற பேட்ஜ் உள்ளவர்கள் : கிழக்கு சித்திரை வீதியில் வடக்கு பகுதியில் இருந்து அஷ்டசக்தி மண்டபம் வழியாகவும் செல்ல வேண்டும்.

பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு வசதிக்காகவும், செப்டம்பர் 17 காலை கும்பாபிஷேக நிகழ்வின் பொழுது பொதுமக்கள் ஆவணி மூலவிதிகள் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

அனுமதி அட்டை இல்லாத பக்தர்கள் சித்திரை வீதிகளில் காலை 10 மணி வரை அனுமதி வழங்கப்படவில்லை; பழைய கட்டிடங்களிலும் பொதுமக்கள் நிற்பதற்கு அனுமதி இல்லை.

காலை 10 மணிக்கு பிறகு பொதுமக்கள் தரிசிக்கலாம்

காலை 10 மணிக்கு பிறகு, அனுமதி அட்டை இல்லாத தெற்கு கோபுரம் மற்றும் மேற்கு கோபுரம் வழியாக பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.

மதுரை மாவட்டம் - உள்ளூர் விடுமுறை

17 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவிருக்கிறது என்பதால் மதுரை மாவட்டத்திற்கு செப்டம்பர் 17ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணமில்லா தரிசனம்

கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், செப்டம்பர் 17 முதல் 20 தேதி வரை, வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கட்டணமில்லாமல் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

====================