திருப்பதி ஏழுமலையான் கோவில்
உலகப் புகழ்பெற்ற திருப்பதி- திருமலை ஏழுமலையான் கோவிலில், பெருமாள் சேவை மற்றும் முக்கிய பிரமுகர்கள், சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பட்டு வஸ்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பட்டு வஸ்திரங்கள் கொள்முதல்
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது, பட்டு வஸ்திரங்களுக்கு பதிலாக போலி வஸ்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
அறங்காவலர் குழுக் கூட்டம்
இந்தநிலையில், அறங்காவலர் குழுக் கூட்டம் திருமலையில் நடைபெற்றது. 86 அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
திருமலையில் தண்ணீர் வீணாவதை தடுக்க கோகர்பம் அணையில் இருந்து ஃபில்டர் பாயின்ட் வரை 2 கி.மீ தூரத்துக்கு ரூ.6 கோடி செலவில் பைப் லைன்
கோ-ஆப்டெஸ்க் மூலம் பட்டு வஸ்திரங்கள்
ஆப்கோ மற்றும் தமிழக கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் பட்டு வஸ்திரங்கள், போர்வைகள் ஆகியவற்றை ரூ.44.20 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் பட்டு வஸ்திரங்கள்
கோ-ஆப்டெக்ஸ், காஞ்சிபுரம் மற்றும் பிற ஊர்களின் தரமான பட்டு வஸ்திரங்களுக்கு பெயர் பெற்றது.
பட்டு வஸ்திரங்கள்: ஏழுமலையானுக்கு சிறப்பு விசேஷங்களின் போது சாத்துவதற்கான உயர்தர பட்டு வஸ்திரங்கள் கோ-ஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
ஏழுமலையானுக்கு நிலம் காணிக்கை
கோவை பேரூர் தாலுகா செட்டிபாளையம் பகுதியில் ஜி-ஸ்கொயர் நிறுவனத்தார் திருப்பதி தேவஸ்தானத்துக்கு 19.43 ஏக்கர் நிலத்தை பத்திரப் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
இதனை தேவஸ்தான அசையா சொத்துகள் பதிவேட்டில் சேர்க்க அறங்காவலர் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் பத்மாவதி தாயார் கோயில் கட்ட தேவையான நிதியை அளிக்க அறங்காவலர் குழு உறுப்பினர் சவுரப் போரா முன்வந்துள்ளார்.
நிரந்தர யாகசாலை
திருப்பதி அலிபிரியில் ரூ.4.75 கோடி செலவில் நிரந்தர யாக சாலை அமைக்கப்படும். திருமலையில் உள்ள சாலைகள், சர்க்கிள்களுக்கு சுவாமி பெயர்கள் சூட்டப்படும் என்றும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
=================