Devotees are gathering in Tiruvannamalai ahead of the Karthigai Deepam festival source:thamizhalai,ai generated
ஆன்மிகம்

"அண்ணாமலையாருக்கு அரோகரா" : நாளை கார்த்திகை தீபம்! விழாக்கோலம் பூண்டுள்ள திருவண்ணாமலை, குவியும் பக்தர்கள்..!

கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

Kannan

கார்த்திகை தீபத் திருநாள்

கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமும் பெளர்ணமியும் இணைந்து வரும் நாளே கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது.

நாளை கார்த்திகை தீபம்

நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக கோலாகலமாக காணப்படும் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

பரணி தீபம், மகா தீபம்

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் கோயிலில் ஏற்றப்படும். அந்த தீபத்தை காண்பதற்கு குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கு 3 ஆயிரம் பக்தர்களுக்கு கட்டணமின்றி ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.

பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் மட்டுமின்றி அடி அண்ணாமலையார் கோயிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அங்கு சிறப்பு வழிபாடுகளுக்கும், தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அமைந்துள்ள பர்வதமலையில் மலை ஏறுவதற்கு 1200 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையங்கள்

தீபத்தை காண்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். வெளியூர் பயணிகள் வசதிக்காக திருவண்ணாமலையில் மொத்தம் 10 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை புதிய பேருந்துநிலையம் மட்டுமின்றி 10 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு ஏற்பாடுகள்

சமீபகாலமாக திருவண்ணாமலைக்கு ஆந்திர, தெலங்கானா, கர்நாடக பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கும், கிரிவலம் செல்வதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

====