Devotees throng Sabarimala Ayyappa temple as schools are closed Devotees throng Sabarimala Ayyappa temple as schools are closed
ஆன்மிகம்

சபரிமலையில் பக்தர்கள் வெள்ளம் : தங்க அங்கியில் ஐயப்பன் தரிசனம்

பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

Kannan

சபரிமலை - மண்டல பூஜை

Sabarimala experiences massive crowds, especially during the Mandala season உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல கால பூஜையின் நிறைவு கட்டத்தை நெருங்கியுள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி மண்டல கால பூஜைகள் நாளை மறுநாள் ( 27ம் தேதி ) நடைபெறும் மண்டல பூஜைகளுடன் நிறைவு பெறும்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பு

தொடக்கத்தில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்ததால், ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரமாக குறைக்கப்பட்டது. அதன் பின்னர் நிலைமை ஓரளவுக்கு சீரானது. தற்போது 90 ஆயிரம் பேர், ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

வார இறுதியில் கூட்டம் குறைவு

பக்தர்கள் வரிசை நகரும் வேகத்தை பொருத்து, சில நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஐயப்பனை வழிபட்டு செல்கிறார்கள்.

எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த சீசனில் சனி, ஞாயிறு தினங்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்

அரையாண்டு பள்ளி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஒரு லட்சத்துக்கு அதிகமானோர் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். கூட்டம் அதிகமானதால் படியில் பக்தர்களை ஏற்றுவதும் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

காத்துக் கிடக்கும் பக்தர்கள்

இரண்டு நாட்களாக சரங்குத்தி கியூ காம்ப்ளக்ஸில் பக்தர்கள் நீண்ட நேரம் தங்க வைத்த பின்னரே சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மரக்கூட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சந்திராங்கதன் ரோடு வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப் படவில்லை.

7.5 லட்சம் பேருக்கு அன்னதானம்

மாளிகைப்புறத்தம்மன் கோயில் பின்புறம் உள்ள அன்னதான மண்டபத்தில் நேற்றுவரை ஏழரை லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் அன்னதான நன்கொடையாக கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. அன்னதான மண்டபத்தில் மூன்று ஷிப்டுகளாக 235 பணியாளர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.

27ம் தேதி மண்டல பூஜை

தங்க அங்கி நாளை மாலை சபரிமலை தேவஸ்தானத்தை அடையும். 6 மணி அளவில், ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு ஆராதனை காட்டப்படும். பின்னர் 27ம் தேதி மண்டல பூஜைகள் நடத்தப்பட்டு, அன்றிரவு நடை சாத்தப்படும்.

மண்டல பூஜை காரணமாக நாளை 30 ஆயிரம் பேருக்கும், நாளை மறுநாள் 35 ஆயிரம் பேருக்கும் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு வழங்கப்பட்டுள்ளது. ஸ்பாட் புக்கிங் இரண்டாயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

================