farmer has offered Miyazaki mangoes worth ₹1 lakh in worship to Lord Ram of Ayodhya google
ஆன்மிகம்

”1 லட்சம் மதிப்புள்ள மியாசாகி மாம்பழம்” : விளைவித்து அசத்திய விவசாயி, அயோத்தி ராமருக்கு படையலிட்டு வழிபாடு...!

அயோத்தி ராமருக்கு 1 லட்சம் மதிப்புள்ள மியாசாகி மாம்பழங்களை படையலிட்டு வழிபட்டு இருக்கிறார் விவசாயி ஒருவர்.

Kannan

மாம்பழ விளைச்சல்

மாம்பழ விளைச்சலுக்கு பெயர் போனது இந்தியா. இதேபோன்று பல்வேறு நாடுகளில் சுவைமிக்க மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. அதிலும் ஜப்பானில் விளையும் மியாசாகி மாம்பழங்கள் உலகப் புகழ் பெற்றவை.

மியாசாகி மாம்பழங்கள்

கியூஷு மாகாணம் மியா​சாகி நகரைத் தாயக​மாகக் கொண்ட இந்த மாம்​பழங்​கள், உலகிலேயே மிக விலை​யுயர்ந்த மாம்பழ வகை​யாகக் கருதப்​படு​கின்​றன.

விலை ரூ.3.5 லட்சம் வரை

சர்​வ​தேசச் சந்​தை​யில் இதன் விலை ஒரு கிலோ ரூ.1.5 லட்​சம் முதல் ரூ.3.5 வரை லட்​சம் வரை விற்​பனை​யாகிறது. இந்த வகை மாம்​பழங்​கள் பழுக்​கும் போது, வழக்​க​மான மாம்பழங்​களைப் போல மஞ்​சள் நிற​மாக மாறாமல், அடர் ஊதா அல்லது ரூபி-சிவப்பு நிறத்​தைப் பெறுகின்​றன.

சூரியனின் முட்டை

ஜப்​பான் மக்கள் இதனை ‘சூரியனின் முட்​டை' (Egg of the Sun) என்​று பாசத்தோடு அழைக்​கிறார்கள். இந்த மாம்பழங்களின் விலை அதிகம் என்பதால் சாதாரண தோப்புகளில், திறந்த வெளிகளில் விளைவிக்கப்படுவது கிடையாது.

பசுமை குடில்கள் வளர்ப்பு

வெப்​பநிலை மற்​றும் சூரிய ஒளி கட்​டுப்​படுத்​தப்​பட்ட நவீன கண்ணாடி பசுமைக் குடில்​களில் மட்​டுமே வளர்க்​கப்​படு​கின்​றன.

ஜப்​பானிய வேளாண் அமைப்​பு​களின் கடுமை​யான தரக்​கட்​டுப்​பாட்​டின்​படி, ஒவ்​வொரு பழமும் குறைந்​த​பட்​சம் 350 கிராம் எடை​யும், 15 சதவீதத்​துக்​கும் அதி​க​மான சர்க்​கரை அளவும் கொண்​டிருந்​தால் மட்​டுமே ‘மி​யா​சாகி' என்ற பெயரில் சந்​தைப்​படுத்த அனு​ம​திக்​கப்​படு​கின்​றன.

ராமருக்கு மியாசாகி மாம்பழ படையல்

உத்​தரபிரதேச மாநிலம் அயோத்​தி​யில் உள்ள ராமருக்கு ரூ.1 லட்​சம் மதிப்​பிலான மியா​சாகி மாம்பழம் முதன்​முறை​யாக படைக்​கப்​பட்​டுள்​ளது. துளசி இலை​யுடன் இந்த வகை மியாசாகிபழம் படைக்​கப்​பட்​டது. ஒரு மாம்​பழத்​தின் விலை ரூ.1 லட்​சமாகும்.

அயோத்தி தோட்டத்தில் விளைவிப்பு

அயோத்​தி​யிலுள்ள தனது தோட்​டத்​தில் ஓம்​பிர​காஷ் சிங் மியாசாகி மாம்பழங்களை விளைவித்து இருந்தார்

இதுகுறித்து ஓம்​பிர​காஷ் சிங் கூறும்​போது, “இந்த மாம்பழங்கள் மிக​வும் விலை உயர்ந்​தவை​யாகும். மற்ற மாம்​பழங்​களின் சுவையைக் காட்​டிலும் இது கூடு​தல் சுவை மிக்​கது. அதிக நார்ச்​சத்​தும், வைட்​ட​மின் சத்​துகளும் கொண்​டது.

12 மியாசாகி மாம்பழங்கள் விளைந்தன

அயோத்​தி​யில் உள்ள தட்​பவெப்ப நிலைக்கு இந்த வகை மியாசாகி பழங்​கள் சிறப்​பாக விளை​கின்​றன. இந்த ஆண்டு 150 கிராம் எடை முதல் 300 கிராம் எடை வரையி​லான 12 மியா​சாகி மாம்​பழங்​கள் மரத்​தில் விளைந்​தன. முதல் மாம்​பழத்தை அயோத்தி ராமருக்கு படைத்​தேன்’’ என்​றார்.

மாம்​பழ கனிகளின் அரசன் என்று அழைக்​கப்​படும் மியாசாகி மாம்பழங்கள் சூரியனின் நிறத்தை ஒத்து இருக்கின்றன.

இவை ராமருக்கு படைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக கோவில் நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ​கோவிலுக்கு வந்த பக்தர்களும் பாலராமருக்கு மியாசாகி மாம்பழங்கள் படைக்கப்பட்டு இருப்பதை, வியந்து பார்த்து சென்றனர்.

============