ஆன்மிக சுற்றுலா
IRCTC Bharat Gaurav Spiritual Tour Packages 2026 : தமிழக மக்களின் ஆன்மிக சுற்றுலா கனவை நிறைவேற்றும் வகையில் இந்திய ரயில்வே தனியார் நிறுவனத்துடன் இணைந்து பாரத் கவுரவ் (Bharat Gaurav ) ரயில்களை இயக்கி வருகிறது.
வட மாநில தலங்களுக்கு சுற்றுலா
அந்த வகையில் தற்போது வடமாநில திவ்ய தேசங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்லும் வகையில் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து சுற்றுலா ரயில்
அதன்படி இந்த ஆன்மிக சுற்றுலா ரயில் மார்ச் 28 ஆம் தேதி கோவையில் இருந்து புறப்படம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் புறப்படும் இந்த சிறப்பு ரயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், எழுப்பூர் வழியாக பயணிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
எந்தெந்த ஊர்களுக்கு சுற்றுலா
வடமாநில திவ்ய தேச சுற்றுலாவிற்கான இந்த பயணம் 11 நாட்களைக் கொண்டது. இந்த பயணத்தின் போது வாரணாசி, அயோத்தி, நமிசாரண்யம், மதுரா, பிருந்தாவனம், தேவப்பிரயாகை, ஜோஷிமித், ஹரித்வார் முதலான இடங்களுக்கு சென்று ஆன்மிக தரிசனம் செய்யலாம்.
முன்பதிவு செய்ய
இந்த ஆன்மிக சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்வதற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம்.
மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 73058 58585 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று 'டூர் டைம்ஸ் சுற்றுலா நிறுவனம்' தெரிவித்துள்ளது.
கட்டணம் எவ்வளவு?
இந்த பயணத்திற்கான மூன்றாம் வகுப்பு ஏசி கோச்சில் பயணிக்க ஒருவருக்கு ரூ. 45,950 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.