IRCTC SPIRITUAL TOUR PACKAGE 2026:
ஆன்மிக சுற்றுலா பயணம்
புனித யாத்திரை மேற்கொள்ளும் ஆன்மிக பக்தர்களுக்காக இந்தியன் ரயில்வே மற்றும் சுற்றுலா கழகம் ஒரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மார்ச் 21 முதல் ஜூன் 3 வரை
Bharat Gaurav Tourist Train மூலமாக ஓர் ஆன்மிக பயணம் குறித்தான அறிவிப்பை ரயில்வே அறிவித்துள்ளது. இந்த பயணம் மார்ச் 21 ஆம் தேதி முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை இயக்கப்படவுள்ளது.
தென்னிந்திய ஆன்மிகத் தலங்கள்
Dakshina Yatra with Jyotirlinga எனும் இந்த ஆன்மிக யாத்திரையில், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் முதலான தென்னிந்திய ஆன்மிகத் தலங்கள் இடம்பெறும்.
ஜோதிர்லிங்கத்துடன் கூடிய திவ்ய தட்சிண யாத்திரை
தென்னிந்திய ஆலயங்களுக்கான இந்த பயணமானது, மார்ச் 21 ஆம் தேதி மார்ச் 28 ஆம் தேதி வரையும் அதேபோல் மீண்டும் மே மாதம் 24 ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரையிலும் இயக்கபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து ரயில்
இந்த ஜோதிர்லிங்கத்துடன் கூடிய திவ்ய தட்சிண யாத்திரைக்கான ஆன்மிக பயணத்திற்கான Bharat Gaurav Tourist ரயில் ஹைதராபாத்தில் இருந்து தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சப்த ஜோதிர்லிங்க தரிசன யாத்திரை
அடுத்ததாக, சப்த ஜோதிர்லிங்க தரிசன யாத்திரையானது ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த ஆன்மிக பயணத்தில் உஜ்ஜைன், துவாரகா, சோம்நாத், புனே, நாசிக் மற்றும் அவுரங்காபாத்தில் உள்ள ஆன்மிக தலங்களை தரிசிக்கலாம்.
அயோத்தி, காசி ஆன்மிக பயணம்
Ayodhya–Kashi–Baidyanath Dham Darshan Yatra எனும் இந்த ஆன்மிக பயணத்தில், பூரி, கோனார்க் சூரியன் கோயில், பைத்யநாத் தாம், வாரணாசி, அயோத்தி மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் உள்ள ஆன்மிக தலங்களை தரிசிக்கலாம்.
இந்த பயணமானது ஏப்ரல் 28 ஆம் தேதி முதல், மே ஐந்தாம் தேதி வரையிலும், அதேபோல் மீண்டும் ஜூன் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.
ஆன்மிக சுற்றுலா பயண விவரங்கள்
IRCTC, DIVYA DAKSHIN YATRA WITH JYOTIRLINGA எனும் இந்த ஆன்மிக பயணத்தை 2 AC ஒரு நபருக்கு ரூ.28,700 , 3 AC ஒரு நபருக்கு ரூ.22,300 , Sleeper ஒரு நபருக்கு ரூ. 14,700 என மூன்று வகுப்புகளில், 8 நாள் பயணமாக நிர்ணயித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு IRCTC -யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை www.irctctourism.com பார்வையிட்டு, முன்பதிவு செய்துகொள்ளவும்.