Karthigai Deepam 2025 Celebrated on December 3 in Tiruvannamalai Karthigai Deepam 2025 Date in Tamil Google
ஆன்மிகம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025 : பரணி, மகா தீபம், முழு விவரம்

Tiruvannamalai Karthigai Deepam 2025 Date in Tamil : திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், முழு தகவல்களை விவரமாக பார்க்கலாம்.

Kannan, MTM

திருவண்ணாமலை கோவில்

Tiruvannamalai Karthigai Deepam 2025 Date in Tamil : நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. உலகப் புகழ் பெற்ற இந்தக் கோவிலில் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுடன் அருள்பாலிக்கிறார்.

இங்கு ஆண்டு முழுவதும் நடைபெறும் விழாக்களில் மிக முக்கியமானது கார்த்திகை தீபத் திருநாள். மாதந்தோறும் வரும் பவுர்ணமியின் போது, இங்கு நடைபெறும் கிரிவலத்தில் லட்சக் கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.

டிசம்பர் 3 - கார்த்திகை தீபத் திருவிழா

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில், திருக்கார்த்திகை உற்சவம் டிசம்பர் மூன்றாம் தேதி (03-12-2025) நடைபெற உள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னிக்கு உரிய கோயிலாக திருவண்ணாமலை திகழ்ந்து வருகிறது.

இங்கு நடைபெற இருக்கும் கார்த்திகை தீபத் திருவிழா குறித்த முழு விவரங்களை பார்க்கலாம் :

  1. 24-11-2025 - திங்கட்கிழமை - காலையில் கொடியேற்றம், மாலையில் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி அதிகார நந்தி, சிம்ம வாகனம், மயில், மூஷிகம் வாகனங்களில் வீதியுலா

  2. 25-11-2025 - செவ்வாய்க்கிழமை - காலையில் தங்க சூரிய பிரபை உற்சவம், இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள், வெள்ளி இந்திர விமானத்தில் பவனி

  3. 26-11-2025 - புதன்கிழமை - காலையில் பூத வாகனம். இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்மவாகனம், வெள்ளி அன்ன வாகன உற்சவம் .

  4. 27-11-2025 - வியாழக்கிழமை - காலையில் நாக வாகனம், இரவு பஞ்சமூர்த்திகள், வெள்ளி காமதேனு, கற்பக விருச்சிக வாகனத்தில் வீதியுலா

  5. 28-11-2025 - வெள்ளிக்கிழமை - காலையில் கண்ணாடி ரிஷப வாகனம். இரவு ஞ்சமூர்த்திகள் வெள்ளி பெரிய ரிஷப வாகன உற்சவம்

  6. 29-11-2025 - சனிக்கிழமை - காலையில் வெள்ளி யானை வாகனம், 63 நாயன்மார்கள் வீதியுலா. இரவு பஞ்சமூர்த்திகள் - வெள்ளி ரதம், வெள்ளி விமானங்களில் பவனி

  7. 30-11-2025 - ஞாயிற்றுக்கிழமை - காலையில் விநாயகர் தேர் வடம் பிடித்தல். பஞ்ச மூர்த்திகளின் மகாராதங்கள் தேரோட்டம். மாலையில் பஞ்ச மூர்த்திகள் ஆஸ்தான மண்டபம் வந்து சேரும் உற்சவம்.

  8. 01-12-2025 - திங்கட்கிழமை - காலையில் குதிரை வாகனம். மாலை பிச்சாண்டவர் உற்சவம், இரவு பஞ்ச மூர்த்திகள் குதிரை வாகனம்

  9. 2-12-2025 - செவ்வாய்க்கிழமை - காலையில் புருஷா முனி வாகனம், இரவு பஞ்ச மூர்த்திகள் கைலாச வாகனம், காமதேனு வாகனம்.

  10. 03-12-2025 - புதன்கிழமை - அதிகாலை 4 மணிக்கு பரணி தீப தரிசனம். மாலை 6:00 மணிக்கு மலை உச்சியில் மகா தீப தரிசனம்

  11. 04-12-2025 - வியாழக்கிழமை - இரவு 9 மணிக்கு சந்திரசேகர் தெப்பல் உற்சவம்

  12. 05-12-2025 - வெள்ளிக்கிழமை - இரவு பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம்

  13. 06-12-2025 - சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம்

-------------