திருவண்ணாமலை அண்ணாமலையார்
Tiruvannamalai Karthigai Deepam 2025 Kodiyetram Dates in Tamil : திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். முக்கிய நாட்களில், பவுர்ணமி கிரிவலத்தின் போது இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் விழாக்களின் சிகரம் எது என்றால், கார்த்திகை தீபத் திருவிழாவாகும்.
அக்னி பிழம்பாய் சிவபெருமான்
அக்னியாக உருவெடுத்த சிவபெருமான், திருமாலுக்கும், பிரம்மனுக்கும் காட்சி தந்ததாக ஐதீகம். சிவபிரானிம் முடியையும், அடியையும் காண முடியாமல் இருந்த அவர்களுக்கு ஐயன் அருள்பாலித்தார். அந்தநாளே, திருக்கார்த்திகை தீபத் திருநாளாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கார்த்திகை தீபக் கொடியேற்றம்
டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், அதற்கான கொடியேற்றம் அண்ணாமலையால் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. சிறப்பு ஆராதனைகளுக்கு பிறகு, தங்க முலாம் பூசப்பட்ட 63 அடி உயர கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கார்த்திகை தீபக் கொடியேற்றம் நடைபெற்றது.
பக்தர்கள் திரளாக பங்கேற்பு
அண்ணாமலையார் சந்நிதி எதிரேயுள்ள தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றி வைக்க, இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா இந்த விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாகும்.
தீபத் திருவிழா ஏற்பாடுகள்
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா திருக்கோயில் பராமரிப்பு, பஞ்ச ரதங்கள் சீரமைப்பு பணி செய்தல் போன்ற பணிகளோடு தொடங்கியது. துரிதமாக நடந்தது.. அம்மன் தேர் முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டது. தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும் 10 நாட்களும் சுவாமி புறப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அனைத்தையும் சீரமைக்கப்பட்டன. காவல் தெய்வத்திற்கும் கடந்த வாரம் வழிபாடு நடத்தப்பட்டது.
பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள்
பக்தர்களின் வசதிக்காக அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டன. பக்தர்களுக்கு இடையூறாக கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
பஞ்சமூர்த்திகள் வீதியுலா
முதல் நாளான இன்று காலை மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற உள்ளது.. விழாவின் 7ம் நாள் தேரோட்டத்தை தவிர்த்து மற்ற நாட்களில் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெறுகிறது.
டிசம்பர் 3 - கார்த்திகை தீபம்
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 10வது நாள் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும். அதன்படி, டிசம்பர் 3ம் தேதி, அதிகாலை(Tiruvannamalai Karthigai Deepam 2025 Date and Time in Tami), 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்கு 2,688 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இந்த விழாவில் லட்சக் கணக்கானோர் கலந்து கொண்டு மகாதீப வடிவில் அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.
சிறப்பு ரயில்கள், பேருந்துகள்
தமிழகம் மட்டுமின்று, அண்டை மாநிலங்களிலும் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் மொத்தம் 4,764 பஸ்கள் இயக்கப்படும். தீபத் திருவிழா பாதுகாப்பிற்காக சுமார் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள்.
சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்
கிரிவல பாதை மற்றும் மாட வீதி உள்பட அனைத்து இடங்களில் 24 கண்காணிப்பு கோபுரங்கள், 61 போலீஸ் உதவி மையங்கள், 454 அறிவிப்பு மையங்கள், 1060 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன..
==============.