திருவண்ணாமலை தீபத் திருவிழா
Tiruvannamalai Karthigai Deepam 2025 Schedule Dates in Tamil : திருவண்ணாமலை தீபத் திருவிழா என்பது கார்த்திகை மாதத்தில் நடைபெறும் 10 நாள் விழாவாகும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் ஒரு உலகப் புகழ்பெற்ற விழா இது. கார்த்திகை தீபத்தன்று மாலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.
அக்னி பிழம்பாக சிவன்
சிவன் அக்னி பிழம்பாக காட்சி தந்ததன் நினைவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. பிரமனும், திருமாலும் சிவபெருமானின் அடி மற்றும் நுனியை காண முடியாமல் மெய்சிலித்தனர். அதை நினைவு கூரும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபத் திருவிழா ஏற்பாடுகள்
கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் லட்சக் கணக்கானோர் ஜோதி தரிசனம் கண்டு, அண்ணாமலையாரை வழிபடுவர். இந்த ஆண்டு தீபத் திருவிழா டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது(Thiruvannamalai Deepam 2025 Schedule). அதற்கான விழா இன்று தொடங்கியது. நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவத்துடன் விழா ஆரம்பித்தது. பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல், தீபத் திருவிழா நடக்க வேண்டி இந்த உற்சவம் நடைபெற்றது.
நவம்பர் 24ல் கொடியேற்றம்
வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் விழா முறைப்படி தொடங்குகிறது(Tiruvannamalai Karthigai Deepam 2025 Dates in Tamil). அன்று கோவிலில் உள்ள கொடி ஏற்றப்பட்ட பிறகு, நாள் தோறும் காலை மாலையில் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
டிசம்பர் 3 - தீபத் திருவிழா
விழாவின் சிகர நிகழ்ச்சிகள் டிசம்பர் 3ம் தேதி நடைபெறும். அன்று அதிகாலை கோவிலில் பரணி தீபம்(Tiruvannamalai Karthigai Deepam 2025 Date) ஏற்றப்படும். பின்னர் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்வில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து தீப தரிசனம் செய்வார்கள்.
பக்தர்களுக்காக விரிவான ஏற்பாடுகள்
லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபத் திருவிழாவில் மலை மீது தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டு லாரி மூலம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
ராஜேந்திர சோழன் - தீபத் திருவிழா
முதலாம் ராஜேந்திரச் சோழனின் ஆட்சியில் அதாவது கி.பி. 1037 இல் திருவண்ணமலையில் கார்த்திகைத் திங்களில் தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
"திருவண்ணாமலை உடையார் திருக்கார்த்திகைத் திருநாளில் திருவேட்டை எழுந்தருளி இருந்தால் பெந்திருவவமிர்தமெய்து செய்தருளவும் அடியார்க்குச் சட்டிச்சோறு பிரசாதஞசெய்தருளவும் குடுத்த பொன் ஏழு கழஞ்சில்"
என்ற குறிப்பின் மூலம் இந்த தகவலை அறிய முடிகிறது.
====================