திருவண்ணாமலை தீபத் திருவிழா
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வரும் 24ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறவுள்ளது. தீப தரிசனத்திற்காக லட்சக் கணக்கானோர் திருவண்ணாமலையில் குவிவார்கள்.
சிறப்பு மெமு ரயில்கள்
அதை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 21ம் தேதி, 22,23,24,25, மற்றும் 26ம் தேதிகளில் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து வரும் 23, 24, 25 ஆம் தேதிகளில் காலை 6.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் அன்றைய தினம் நண்பகல் 11.40 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் அதே நாட்களில் இரவு 11.55 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு மெமு ரயில் இயக்கப்பட உள்ளது.
தாம்பரம் - திருவண்ணாமலை
இதேபோன்று தாம்பரத்தில் இருந்து வரும் 23, 24, 25 ஆம் தேதிகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் அன்றைய தினம் பகல் 1.30 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
அதே நாட்களில் இரவு 10.25 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு மெமு ரயில் இயக்கப்படும்.
விழுப்புரம் - திருவண்ணாமலை
விழுப்புரத்தில் இருந்து வரும் 22, 23, 24 ஆம் தேதிகளில் இரவு 10.40 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் வேலுருக்கு புறப்படும்.
அங்கிருந்து 23, 24, 25 ஆம் தேதிகளில் அதிகாலை 2.05 மணிக்கு விழுப்புரத்திற்கு சிறப்பு மெமு ரயில் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை - விழுப்புரம்
திருவண்ணாமலையில் இருந்து வரும் 23, 24, 25 ஆம் தேதிகளில் மாலை 6.20 மணிக்கு விழுப்புரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் இயக்கப்படும்.
அங்கிருந்து அதே நாட்களில் இரவு 8 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
================