கார்த்திகை மாதம்
Karthigai Kadai Gnayiru 2025 Date and Rituals in Tamil : கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை இந்தநாள் குறிக்கிறது. கார்த்திகை மாதத்தின் சிறப்பே விரதங்களுக்கும், விளக்கேற்றி வழிபடுவது தான். மழை, குளிர், இதமான தட்பவெப்பம் இந்த மாதத்தில் மக்களின் மனங்களில் அமைதியை நிரப்பி, ஆன்மிக சிந்தையை பெருக்கும்.
கடைசி ஞாயிற்றுக்கிழமை
கார்த்திகை மாதத்தில் வரும் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஐந்தாவது மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமை "கடை ஞாயிறு" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் புனித நதிகளிலோ, கோயில்களில் உள்ள தீர்த்தங்களிலோ நீராடுவது, அகல் விளக்கு ஏற்றி வழிபடுவது போன்ற செயல்கள் செய்வது நன்மை பயக்கும்.
பாவங்களை போக்கும் கடைஞாயிறு
பாவங்களைப் போக்கி, முன்னோர்களின் தோஷங்களை நீக்கி, சுபிட்சம் தரும் என நம்பப்படுகிறது. ஸ்ரீவாஞ்சியம், திருநாகேஸ்வரம், விரிஞ்சிபுரம் போன்ற பல சிவாலயங்களில் கார்த்திகை கடை ஞாயிறு அன்று சிறப்பு தீர்த்தவாரி மற்றும் விழாக்கள் நடைபெறும், மக்கள் மண்சட்டியில் விளக்கேற்றி வழிபடுவார்கள்.
கடைஞாயிறு தீர்த்தவாரி
கடைஞாயிறு தீர்த்தவாரி என்பது புனித நீராடல் திருவிழா ஆகும். இகுத்தாலம் காவிரி படித்துறை, திருநாகேஸ்வரம் போன்ற தலங்களில் நடைபெறும். பக்தர்கள் புனித நீராடி, சிவபெருமானை வழிபட்டு, வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவார்கள்.
ராகு பகவானின் பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி விழா மிகவும் பிரபலம், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும்.
குத்தாலம் தீர்த்தவாரி வைபவம்
குத்தாலம் காவிரி ஆற்றங்கரையில் நடைபெறும் தீர்த்தவாரியில், சிவன் மற்றும் அம்மன் கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் (சிவன், சக்தி, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர்) காவிரி கரையில் எழுந்தருள்வார்கள்.
அப்போது, பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, சுவாமி மற்றும்அம்பாளுக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். இந்த நீராடல் மற்றும் வழிபாடு சகல நோய்களையும், பாவங்களையும் நீக்கும் என்பது நம்பிக்கை.
விரிஞ்சிபுரத்தில் தீர்த்தவாரி
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை (கடை ஞாயிறு) அன்று நடைபெறும் தீர்த்தவாரி திருவிழா மிகவும் விசேஷமானது; இது குழந்தை பாக்கியம் வேண்டி வழிபடுவோருக்கு சிறப்பான பலன்களைத் தரும் என நம்பப்படுகிறது,
இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இந்தக் கோவில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியது. புகழ்மிக்க இக்கோயிலின் மதில் சிறப்புடையதாகவும் போற்றப்படுகிறது.
====