Kumbakonam Athi Varadar Temple idol Darshan to be held after 12 years here full details in Tamil google
ஆன்மிகம்

கும்பகோணம் : 12 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் தரிசனம்! மார்ச் 1 முதல் வழிபடலாம்

Kumbakonam Athi Varadar Temple idol Darshan : கும்பகோணத்தில் பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அத்திவரதர் சிலை தரிசனத்துக்கு கோவில் நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

Rohini

அத்திவரதர் சிலை தரிசனம்

Kumbakonam Athi Varadar Temple idol Darshan : தமிழகத்தில் காஞ்சிபுரம், கும்பகோணம் பகுதிகளில் பொதுவாக வரத​ராஜப் பெரு​மாள் கோவில்களில் அத்திவரதர் சிலை உள்ளது. இவற்றுள் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் சிலை பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும் அந்தவகையில் மொத்தம் 48 நாள்களுக்கு பக்தர்கள் சிலையை நேரில் கண்டு வழிபட முடியும்.

அத்திவரதர் சிலை காணப்படும் வேறு பகுதிகள்

இந்த நிகழ்வானது காஞ்சிபுரம் மட்டுமின்றி தஞ்​சாவூர் மாவட்​டம், கும்​பகோணத்தில் உள்ள வரத​ராஜப் பெரு​மாள் கோவிலிலும் நடைபெறுவது வழக்கம். அக்கோவிலின் பாதாள அறை​யில் அத்திவரதர் சிலை வைக்​கப்​பட்​டுள்ளது.

இச்சிலையை 12 ஆண்​டு​களுக்கு ஒருமுறைதான் பாதாள அறையில் இருந்து வெளியே கொண்டு வருவார்கள். அதன் பின்னர் பத்து நாள்களுக்கு அச்சிலையை பக்தர்கள் நேரில் கண்டு வழிபடலாம்.

இந்த ஆண்டிற்கான அத்திவரதர் சிலை வழிபாடு

அந்த வங்கியின் இந்த ஆண்டிற்கான வழிபாடு ,எதிர்வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பத்து நாள்களுக்கு அத்திவரதர் சிலையைப் பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

98 ஆண்​டு​களுக்கு பிறகு பக்தர்களின் வழிபாட்டிற்கு வரும் அத்திவரதர்

கடைசியாக கடந்த 1915ஆம் ஆண்​டு வரை வரதராஜ பெருமாள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த அச்சிலையைப் பக்தர்கள் எந்தவிதத் தடையுமின்றி வழிபட்டனர்.

அதன் பின்னர், சில காரணங்களால் அந்தச் சிலை வெளியே கொண்டு வரப்படவில்லை என்ற போதிலும் 98 ஆண்​டு​களுக்கு பிறகுதான் அத்திவரதர் சிலை மீண்டும் பக்தர்களின் தரிசனத்துக்காக 2013ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு இதனை தரிசிக்க கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது .