Madurai High Court Judgement on Thiruparankundram Karthigai Deepam Issue Case Latest News in Tamil Google
ஆன்மிகம்

தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்- தடையை ரத்து செய்து நீதிபதி உத்தரவு!

Madurai High Court Judgement on Thiruparankundram Karthigai Deepam Issue Case : திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை ரத்து செய்து, தீபம் ஏற்றலாம் என நீதிபதி சாமிநாதன் தீர்ப்பளித்துள்ளார்.

Baala Murugan

மனுவை விசாரித்த நீதிபிதி ஜி.ஆர். சாமிநாதன்

Madurai High Court Judgement on Thiruparankundram Karthigai Deepam Issue Case : மதுரை, திருப்பரங்குன்றத்தில் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தள்ளுபடி செய்தது. இந்த வழக்கை மீண்டும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே விசாரிப்பார் என்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே. கே. ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இன்று மீண்டும் விசாரித்தார். அப்போது நீதிபதி கூறியதாவது: “தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவால் அரசு பாதிக்கப்படவில்லை; ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.”

உடனே காணொளியில் ஆஜரதகவேண்டும் என்று உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதியிடம் அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. அப்போது உடனே காணொலியில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். “சீருடையில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை; உடனே ஆஜராக வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

மதுரை காவல் ஆணையர் விளக்கம்

இதையடுத்து காணொலி வாயிலாக மதுரை காவல் ஆணையர் ஆஜரானார். அப்போது, “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, “3.30 மணி முதல் பேரிகாடுகளை போட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தோம்” என்று அவர் கூறினார்.

அப்போது, “144 தடை உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு எப்போது பரிந்துரை செய்தீர்கள்?” என்று நீதிபதி கேட்டார். இதற்கு, “மாலை 5.45 மணியளவில் பரிந்துரைக்கப்பட்டது” என்று காவல் ஆணையர் கூறினார். மேலும், “நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கூடாது, நடைமுறைப்படுத்தக்கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல” என்றும் காவல் ஆணையர் கூறினார்.

ஜி.ஆர்.சாமிநாதன் உத்தரவு

திருப்பரங்குன்றத்தில் கோயில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் போடப்பட்ட 144 தடை உத்தரவை நீதிபதி ரத்து செய்தார். இதைத்தொடர்ந்த, மாவட்ட ஆட்சியர், நீதிபதியை விட தான் உயர்ந்தவர் என் காவல் ஆணையர் தன்னை நினைத்துகொண்டு, உத்தரவையும் மதிக்காமல் நடந்துள்ளார்.

இந்நிலையில், இன்று இரவுக்குள் தீபம் ஏற்ற வேண்டும் எனவும், தீபம் ஏற்றுவதற்கு காவல் ஆணையர் லோகநாதன் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு நிறைவேற்றபட்டது குறித்து நாளை காளை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.