Madurai Meenakshi Amman Temple Chithirai Festival: Full Details of Upcoming Key Events! source:google
ஆன்மிகம்

மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் : நவரத்தின செங்கோல் ஏந்தி மாசி வீதிகளில் உலா! : பக்தர்கள் கொண்டாட்டம்!

மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகளின் முழு விவரம் உங்களுக்காக!

S Kavitha

Madurai Meenakshi Amman Temple Chithirai Festival: Full Details of Upcoming Key Events!

மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்குப் பட்டாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.

'பட்டத்து அரசியாக' மீனாட்சி

அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தின செங்கோல் வழங்கப்பட்டு மதுரையின் 'பட்டத்து அரசியாக' மகுடம் சூட்டப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்வு

விழாவின் எட்டாம் நாளான நேற்று, மதுரை மீனாட்சி அம்மனுக்குப் பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்வு பக்திப் பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

ராயர் கிரீடம்... ரத்தின செங்கோல்!

அம்மன் சன்னதியில் உள்ள ஆறுகால் பீடத்தில், இரவு 7:05 மணி முதல் 7:29 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது அம்மனுக்குத் திருமாங்கல்யம் சூட்டப்பட்டு, பழமை வாய்ந்த 'ராயர் கிரீடம்' அணிவிக்கப்பட்டது.

பட்டத்து அரசியாக மீனாட்சி அம்மன்

தொடர்ந்து நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட செங்கோல் வழங்கப்பட்டு, மதுரையின் பட்டத்து அரசியாக மீனாட்சி அம்மன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாசி வீதிகளில் அரசியின் உலா

பட்டாபிஷேகம் முடிந்ததும், மீனாட்சி அம்மனிடம் இருந்த செங்கோல், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜனிடம் வழங்கப்பட்டது.

அவர் செங்கோலை ஏந்தி சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் அம்மனிடம் ஒப்படைத்தார்.

நான்கு மாசி வீதிகளில் வலம்

இதனைத் தொடர்ந்து, பட்டத்து அரசியாக மீனாட்சி அம்மன் வெள்ளிச் சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்தார்.

வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், "மீனாட்சி... மீனாட்சி..." என கோஷமிட்டு அம்மனைத் தரிசித்தனர்.

விழாவில் சிறுவர்கள் மீனாட்சி அம்மன் மற்றும் கருப்பசாமி வேடமணிந்து வந்து சிறப்பித்தனர்.

திருவிழாவின் முக்கிய நாட்கள்

மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், அடுத்தடுத்த முக்கிய நிகழ்வுகளின் முழு விவரம் உங்களுக்காக!

  • ஏப்ரல் 28 (நாளை): மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம்.

  • ஏப்ரல் 29: மாபெரும் தேரோட்டம்.

  • மே 1: சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்.

அரசியாகப் பொறுப்பேற்றுள்ள மீனாட்சி அம்மன், இனி வரும் நான்கு மாதங்கள் மதுரையில் ஆட்சி புரிவார் என்பது ஐதீகம்.

=====