ஐயப்பன் கோவில் நடை திறப்பு:
மாசி மாத பூஜை நாளை தொடங்குவதால் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மட்டுமின்றி மாதாந்திர பூஜைக்காகவும் நடை திறக்கப்படுகிறது.
மாசி மாத பூஜை
அந்த வகையில் மாசி மாத பூஜை நாளை முதல் வருகிற 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனால் இன்று மாலை நடை திறக்கபட்டு, மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார்.
முக்கிய தகவல்கள்
கோவில் நடை திறப்பு : இன்று மாலை 5 மணி
கோவில் நடை சாத்தப்படுதல் : பிப்ரவரி 17 ஆம் தேதி
சிறப்பு பூஜைகள்: கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம்,உச்சி பூஜை மற்றும் மாலை தீபாராதனை, புஷ்ப அபிஷேகம், அத்தாழ பூஜை
தரிசனம்: கூடுதல் வினாடிகள் வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடு
நிர்மால்ய பூஜையும் நெய் அபிஷேகமும்
இன்று சபரிமலையில் எந்த பூஜைகளும் நடைபெறாது. தவக்கோலத்தில் இருக்கும் ஐயப்பன் மீதுள்ள விபூதி அகற்றப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
இரவு பத்து மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில நடை சாற்றப்பட்டு, அடுத்த நாள் காலை 5 மணிக்கு மீண்டும் கோவில் திறக்கப்படும்.
பின்னர் நிர்மால்ய தரிசனத்தைத் தொடர்ந்து ஐயப்பன் சில்லைக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். நெய் அபிஷேகமானது தந்திரி மகேஷ் மோகனருவால் செய்யப்படும்.
சிறப்பு பூஜை
நெய் அபிஷேகத்தைத் தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, படி பூஜை, களபாபிஷேகம்,உச்சி பூஜை மற்றும் மாலை தீபாராதனை, புஷ்ப அபிஷேகம், அத்தாழ பூஜை முதலானவை நடைபெரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவு
மாசி மாத பூஜைக்காக ஏற்கெனவே முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.
அந்தவகையில் கடந்தவாரம் இந்த பூஜைக்காக முன்பதிவு செய்த பக்தர்கள் இன்று முதல் தரிசனம் செய்வர்.
விரைவு வழி
ஐயப்பனை தரிசிக்க பதினெட்டாம் படி ஏறும் பக்தர்கள் கோவிலின் இடது பக்கம் உள்ள பல்வேறு நடைபாதைகளை சுற்றி பின்னர் தான் மூலஸ்தானத்திற்கு வந்து தரிசிக்க முடியும்.
இதன் காரணமாக நீண்ட வரிசையில் காத்திருப்பது மட்டுமல்லாமல் சில வினாடிகள் மட்டும் தான் ஐயப்பனை தரிசனம் செய்ய முடியும் .
ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி
ஆனால் சன்னிதானம் அருகே வரை அமைக்கப்படும் இந்த விரைவு பாதையால் கொடி மரத்தைக் கடந்ததும் நேராக மூலஸ்தானம் சென்று சற்று கூடுதல் வினாடிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்ய முடியும்.
மண்டல மகர விளக்கு பூஜையின் போது கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் இப்போதும் விரைவு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் என ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.