சபரிமலை மண்டல பூஜை
Sabarimala pilgrimage: Virtual queue booking for 'Mandala Pooja' started : உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. கார்த்திகை முதல் தேதி முதல் தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர்.
25 லட்சம் பக்தர்கள் தரிசனம்
இதுவரை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். தற்போது தினமும் ஆன்லைனில் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவில் 10 ஆயிரம் பேருக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
மண்டல பூஜை - ஆன்லைன் முன்பதிவு
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 14ம் தேதி வரையிலும், மண்டல பூஜையை முன்னிட்டு டிசம்பர் 26, 27 ஆகிய தேதிகளிலும் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவுதொடங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் மண்டல பூஜையை முன்னிட்டு வரும் 26, 27 ஆகிய தேதிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலைதொடங்கியது. 26ம் தேதி 30 ஆயிரம் பேருக்கும், 27ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும் அனுமதி அளிக்கப்படும்.
www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே பல்லாயிரக் கணக்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது இந்த இரு நாட்களிலும் உடனடி முன்பதிவு மூலம் தலா 5 ஆயிரம் பேருக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.
மண்டல பூஜை வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. அன்றுடன் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவடையும். கோயில் நடை சாத்தப்பட்டு, பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் கோவில் நடை திறக்கப்படும்.
ஜனவரி 11 முதல் 19 வரையிலான தரிசனத்திற்கான முன்பதிவு விரைவில் தொடங்கும்
===============