Postal Dept, Devaswom Board launched service to deliver 'Aravana Payasam’ directly to the homes of devotees source:thamizhalai,ai generated
ஆன்மிகம்

”வீடு தேடி வரும் அரவணை பாயாசம், அப்பம்” : சபரிமலையில் சிறப்பு கவுண்டர் : அஞ்சல் துறையுடன் கைகோர்த்த தேவசம் போர்டு...!

இந்திய தபால் மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணைந்து அரவண பாயசம் மற்றும் அப்பம் பிரசாதத்தை நேரடியாக பக்தர்களின் வீடுகளுக்கு வழங்கும் சேவையை தொடங்கி இருக்கின்றன.

Kannan

கோவில் பிரசாதங்கள்

கோவில்களுக்கு செல்லும் போது அங்கு கிடைக்கும் பிரசாதத்தை, பக்தியோடு வாங்கி வந்து, அனைவருக்கும் வழங்குவது பக்தர்களின் பழக்கம். அதிலும் புகழ்பெற்ற கோவில்கள் என்றால் சோல்ல வேண்டியதே இல்லை.

அரவணை பாயாசம், அப்பம்

அந்தவகையில் உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், பிரசாதமாக கிடைக்கும் அரவணை பாயாசம், அப்பம் பக்தர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சபரிமலைக்குச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியமும் (TDB) இந்திய அஞ்சல் துறையும் இணைந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வழங்கி இருக்கின்றன.

பொதுவாக, சபரிமலைக்கு வரும் பக்தர்கள், தரிசனம் முடிந்து பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து பிரசாதங்களை வாங்கி செல்கிறார்கள். இந்த விரயத்தை தடுக்க வீடு தேடி வரும் பிரசாதம் கைகொடுக்க போகிறது.

இன்று மாலை நடைதிறப்பு

2026-27 ஆம் ஆண்டுக்கான மண்டல-மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் மண்டல பூஜை தொடங்கும்.

இதனையொட்டி, பக்தர்களின் வசதிக்காக திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்திற்கும் இந்திய அஞ்சல் துறைக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

சபரிமலையில் பார்சல் மையம்

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மலையிலுள்ள பிரதான கோயில் வளாகத்தில், தேவஸ்வம் வாரியத்தின் அரவன் மற்றும் அப்பம் கவுன்டர்களுக்கு அருகில், சுவாமி பிரசாதத்திற்கென ஒரு பிரத்யேக பார்சல் முன்பதிவு மையத்தை இந்தியா போஸ்ட் அமைக்கிறது.

24 மணி நேரமும் பதிவு செய்யலாம்

இந்த கவுன்டர் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருக்கும்.

இந்தப் புதிய அமைப்பு பக்தர்களின் பயணச் சுமையை முற்றிலுமாக குறைக்கும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்

தரிசனம் முடிந்த பிறகு, பக்தர்கள் சன்னிதானத்திலேயே அல்லது ஒரு சிறப்பு கவுண்டரில் தங்கள் வீட்டு முகவரியைக் கொடுத்து எத்தனை பிரசாதப் பொட்டலங்களை வேண்டுமானாலும் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

தபால் மூலம் வீடு வந்து சேரும்

இந்தப் பிரசாதங்கள், தபால் துறையின் விரைவு அஞ்சல் பார்சல் சேவை மூலம் நாட்டின் எந்த மூலைக்கும் பாதுகாப்பாக விநியோகிக்கப்படும்.

இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், பக்தர்கள் தங்கள் யாத்திரையை முடித்து வீடு திரும்பும்போதே, அவர்களுக்கான பிரசாதப் பொட்டலங்கள் வீடு வந்து சேர்ந்து விடும்.

திரும்பி வரும் பயணத்தில் பிரசாதப் பொட்டலங்கள் சேதமடைந்துவிடும் என்ற அச்சமோ, அவற்றை எடுத்துச் செல்லும் சிரமமோ இனி இல்லை.

எந்த போஸ்ட் ஆபீசிலும் புக் செய்யலாம்

நாட்டின் எந்த போஸ்ட் ஆபீஸிலிருந்தும் புக்கிங் செய்யும் வசதி

இந்த வசதி சபரிமலை மலையில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மூலமாகவும் கிடைக்கும்.

இதன் மூலம், சபரிமலைக்குச் செல்ல முடியாத பக்தர்கள், இந்தியாவில் உள்ள எந்தவொரு தபால் நிலையத்திலிருந்தும் சுவாமி பிரசாதத்தை முன்பதிவு செய்து, அதைத் தங்கள் வீடுகளுக்கோ அல்லது உறவினர்களின் முகவரிகளுக்கோ வரவழைக்க முடியும்.

============