Prime Minister Narendra Modi hoisted saffron flag Hoisting on the top of Ramar temple in Ayodhya Google
ஆன்மிகம்

அயோத்தி ராமர் கோவில் பணிகள் நிறைவு : கோபுரத்தில் காவிக்கொடி

PM Modi Hoisting Saffron Flag in Ayodhya Ramar Temple : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான்ற பணிகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் 161 அடி உயர கோபுரத்தில் காவிக்கொடியை பிரதமர் மோடி ஏற்றினார்.

Kannan

அயோத்தி ராமர் கோவில்

PM Modi Hoisting Saffron Flag in Ayodhya Ramar Temple : உத்தரபிரதேச மாநிலம் அயோத்​தி​யில் பிரம்​மாண்ட ராமர் கோயில் கட்​டும் பணி கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது. முழுவீச்சில் பணிகள் நிறைவுபெற்ற நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி பக்​ர்​களின் வழி​பாட்​டுக்காக திறக்​கப்​பட்​டது.

இதற்​கான பிராண பிர​திஷ்டை விழா பிரதமர் மோடி தலை​மை​யில் நடை​பெற்​றது. பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் ராமரை வழிபட்டு செல்கிறார்கள்.

கட்டுமான பணிகள் நிறைவு

இதன் பிறகு அயோத்​தி, மற்​றொரு பிரம்​மாண்ட விழாவை இன்று கொண்டாடியது. அது என்னவென்றால் ராமர் கோயி​லின் கட்​டு​மான பணி​கள் முழுமையாக நிறைவடைந்​ததை குறிக்​கும் வகையில் நடைபெற்ற கொடியேற்​றும் விழாவாகும்.

கோவில்களில் பிரதமர் வழிபாடு

இன்று காலை அயோத்தி வந்த பிரதமர் மோடி, மஹரிஷி வசிஷ்டர், மஹரிஷி விஸ்வாமித்திரர், மஹரிஷி அகத்தியர், மஹரிஷி வால்மீகி, தேவி அஹில்யா, நிஷாத்ராஜ் குகன், அன்னை சபரி ஆகியோருக்காக கட்டப்பட்டுள்ள ஏழு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தார்.

ராமர் கோவிலில் சூரியக் கொடி

பின்னர் ராமர் கோவிலுக்கு வந்த அவர், பால ராமரை தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து, கோயி​லின் 161 அடி உயர கோபுரத்​தின் உச்​சி​யில் காவிக் கொடியை அவர் ஏற்றி வைத்தார். ராமபிரான் அவதரித்த சூரிய குலத்தை குறிக்​கும் வகை​யில் சூரிய சின்​னம், மையத்​தில் ஓம் மற்​றும் கோவிதார மரம் பொறிக்​கப்​பட்ட காவிக் கொடி கோவில் கோபுரத்தில் பட்டொளி வீசி பறக்கிறது.

மார்கழி பஞ்சமி திதியில் கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சிக்காக அயோத்​தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ராமர் மற்றும் சீதாயின் விவாக பஞ்சமி திதியுடன் அபிஜித் முகூர்த்தமும் ஒன்றாக வரும் மார்கழி மாதத்தின் பஞ்சமி திதியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

10 அடி உயரம் கொண்ட கொடி

பத்து அடி உயரமும், இருபது அடி நீளமும் கொண்ட இந்த செங்கோண அமைப்பிலான முக்கோணக் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய வட இந்திய நாகரா கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்ட இக்கோயில் சிகரத்தின் உச்சியில், இந்தக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

ராமர் கதையை கூறும் கற்சிற்பங்கள்

கோயிலின் பிரதான வெளிப்புறச் சுவர்களில், வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட பகவான் ராமரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட 87 நிகழ்வுகள், கற்களில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச் சுவர்களின் அருகே இந்தியக் கலாச்சாரத்திலிருந்து எடுக்கப்பட்ட 79 வெண்கல வார்ப்பினாலான காட்சி அமைப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

=================