ஜீவோத்தம் மடம்
PM Modi Inaugurates Bronze Statue of Lord Ram in Goa : கோவா மாநிலம் கனகோனாவில் உள்ள ஸ்ரீ சம்ஸ்தான் கோகர்ண பார்டகலி ஜீவோத்தம் மடம் உள்ளது. இந்த மடம் நாட்டின் பழமையான மடங்களில் ஒன்று. பல ஆண்டுகளாக உலக அளவில் மதிப்பு மிக்க இடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
550 ஆண்டுகால மரபு
550 ஆண்டுகால மரபுகள் இந்த மடத்தில் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார்.
77 அடி உயர ராமர் சிலை
ஸ்ரீ ராமரின் 77 அடி உயர வெண்கல சிலை, இங்கு புனித பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் நடைபெற்ற பிறகு, சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆசியாவிலேயே மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மடம் சரஸ்வத் மற்றும் இந்து சமூகத்தின் ஒற்றுமை மற்றும் அடையாளச் சின்னமாகப் போற்றப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற இந்தியச் சிற்பி ராம் சுதார் ராமர் சிலையை வடிவமைத்தார்.
ராமாயண கருப்பொருள் பூங்கா
ராமரின் லட்சியங்களை போற்றும் வகையில், துள்ளார். இராமாயண கருப்பொருள் பூங்காவும், 10,000 சதுர அடி பரப்பளவில் ராமர் அருங்காட்சியகம் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
ராமர் அருங்காட்சியகம்
அருங்காட்சியகத்தில், ராமர் குறித்த அஞ்சல் தலைகள், அஞ்சல் உறைகள், விஜயநகரப் பேரரசு காலத்து நாணயங்கள் மற்றும் பல்வேறு பாணிகளில் வரையப்பட்ட இராமரின் ஓவியங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.
மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க் கார்டனையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவை முன்னிட்டு பத்ரிநாத்திலிருந்து கோவா வரை பிரமாண்டமான ஸ்ரீ ராம யாத்திரை நடைபெற்றது. விழாவில் சுமார் 1.2 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
550வது ஆண்டு விழா கொண்டாட்டம்
மடத்தின் 550வது ஆண்டு விழா, இன்று (நவம்பர் 27) முதல் டிசம்பர் 7 வரை 11 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மடம் தனது நீண்ட வரலாற்றில், ஆன்மிகம், கல்வி, மற்றும் சுகாதார சேவைகள் மூலம் பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறது.