Rama Navami 2026: Pujas to Perform at Home and Worship Methods! Rama Navami 2026 Date and Time in Tamil source : google
ஆன்மிகம்

ராம நவமி 2026 : வீட்டில் செய்ய வேண்டிய பூஜைகளும், வழிபடும் முறையும்!

Rama Navami Puja 2026 at Home Date and Time in Tamil : ராமரின் விக்கிரகம் இருந்தால், பால், தயிர், தேன் மற்றும் இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது சிறப்பு.

S Kavitha

Rama Navami 2026: Pujas to Perform at Home and Worship Methods!

ராம நவமி என்றால் என்ன?

Rama Navami Puja 2026 at Home Date and Time in Tamil : மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமரின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு முக்கிய தினம் தான் ராம நவமி . இது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத வளர்பிறை நவமி திதியில் கொண்டாடப்படுகிறது.

ராம நவமி 2026 எப்போது?

இது ராமாயண நாயகனான ராமரின் அவதாரத்தையும், நற்பண்புகளையும் போற்றும் நாளாகவும் உள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான ராமநவமி வரும் மார்ச் 26 ஆம் தேதி(Rama Navami 2026 Date in Tamil) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

ராம நாமம் உச்சரித்தால் கோடி நன்மை

இந்த நாளில் ராமபிரானை தரிசித்து, அவர் புகழ் பாடி, அவர் நாமம் உச்சரித்தால் கோடி நன்மை கிட்டும் என்பது ஐதீகம்.

ராம நவமியன்று வீட்டில் செய்ய வேண்டிய பூஜைகள்

ராம நவமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வீடு முழுவதும் தூய்மை செய்து பின்வருவனவற்றை செய்யலாம்.

ராம தர்பார் அமைத்தல்

பூசையறையில் ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் அடங்கிய படத்தை மலர்களால் அலங்கரிக்கவும்.

ராம விக்ரகத்திற்கு அபிஷேகம்

ராமரின் விக்கிரகம் இருந்தால், பால், தயிர், தேன் மற்றும் இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது சிறப்பு.

உச்சரிக்க வேண்டிய மந்திரம்

ராம நவமி அன்று ஓம் ஸ்ரீ ராமாய நம என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கலாம். ராமாயணத்தின் சுந்தர காண்டம் வாசிப்பது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

இந்த ராம நவமி நாளில், ராம நாமத்தை உச்சரிப்பதன் மூலம் மன அமைதியும், எடுத்த காரியங்களில் வெற்றியும் கிட்டும் என்பது திண்ணம்.

ராமரை தொட்டில் ஆட்டுதல்

நண்பகல் 12 மணிக்கு ராமரின் சிறு உருவத்தைத் தொட்டிலில் வைத்து, தாலாட்டுப் பாடல்கள் பாடி தொட்டில் ஆட்டலாம்.

ஐந்துமுக விளக்கில் நெய் தீபம்

ஐந்து முகக் குத்துவிளக்கு ஏற்றி, கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்யவும்.

ஆன்மிக பக்தர்கள் இந்நாளில் வீடுகளில் ராமபிரானை வழிபட்டு, விரதம் இருந்து, ராமாயணம் வாசித்து கொண்டாடுவார்கள்.

சிறப்பு நைவேத்தியம்

தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் ராம நவமி அன்று வெல்லம், சுக்கு, ஏலக்காய் கலந்த பானகம் மற்றும் நீர் மோர் வழங்குவது மரபு.

மேலும் நீராகாரம், பாயசம் மற்றும் கொழுக்கட்டை போன்றவை ராமருக்குப் படைக்கப்படும் முக்கிய நைவேத்தியமாக திகழ்கின்றன.

கோடைக்காலம் தொடங்கும் மார்ச் மாதத்தில், உடலைக் குளிர்ச்சியாக்கவும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.