restrictions for devotees making donations at Tirupati temple, record-breaking ₹97 crore was collected in single day AI generated
ஆன்மிகம்

திருப்பதி பெருமாளுக்கு ஒரே நாளில் ”ரூ.97 கோடி நன்கொடை” : அள்ளிக் கொடுத்த 2,500 பக்தர்கள் : சலுகைகள் ரத்தால் குவிந்தது..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ள சூழலில், ஒரே நாளில் 97 கோடி ரூபாய் குவிந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Kannan

திருப்பதி ஏழுமலையான் கோவில்

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பெருமாளை சேவித்து செல்கிறார்கள்.

குவியும் பக்தர்கள், காணிக்கை

பண்டிகை நாட்களில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது. திருப்பதி என்றாலே லட்டு, மொட்டைக்கு மத்தியில் உண்டியல் காணிக்கைதான் பலருக்கும் நினைவுக்கு வரும். பலர் இன்றளவும் சிறிய உண்டியலில் ஏழுமலையானுக்கு என காணிக்கை சேர்த்து, எடுத்துச் சென்று உண்டியலில் செலுத்துகிறார்கள்.

கோவிலுக்கு பக்தர்கள் நன்கொடை

மேலும், ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையும் வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் ஒரே நாளில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ரூ 96.98 கோடி அளவுக்கு காணிக்கையை வழங்கினர்.

1.97 லட்சம் நன்கொடையாளர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1.97 லட்சம் பக்தர்கல் நன்கொடையாளர்களாக உள்ளனர். இவர்களில் 1.5 லட்சம் பேர் ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் அளித்துள்ளனர்.

22 ஆயிரம் பேர் 10 லட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை கொடுத்துள்ளனர். கடந்த 4 மாதங்களில் மட்டும் 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

வாழ்நாள் முழுவதும் சிறப்பு தரிசனம்

இவ்வாறு நன்கொடை கொடுக்கும் பக்தர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தரிசனத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. சிறப்பு நுழைவு தரிசனம், கருவறைக்கு அருகே சுபதம் வழியாக அனுமதி, பிரேக் அப் தரிசனம் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம் ஆகியவற்றில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நன்கொடை விவகாரத்தில் கட்டுப்பாடு

இந்த நிலையில் நன்கொடை விவகாரங்களில் திருமலை திருப்பதி அண்மையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்படி தனி நபர்களுக்கு 20 ஆண்டுகளுக்கும், அறக்கட்டளைகளுக்கு 15 ஆண்டுகளுக்கு மட்டுமே நன்கொடையாளர் சலுகைகள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி போட்டு நன்கொடை

இந்த புதிய நடைமுறைகள் முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனால் பழைய சலுகைகளை தக்க வைத்துக் கொள்ள ஏராளமானோர் போட்டி போட்டிக் கொண்டு நன்கொடைகளை அளித்தனர்.

ரூ.96.98 கோடி நன்கொடை வரவு

அதன்படி நேற்று முன்தினம் ஒரேநாளில் நன்கொடையாக ரூ 96.98 கோடி வசூலானது. அதில் 2460 பேர் நன்கொடை அளித்தனர்.

இவர்களில் 1,212 பேர் 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் வரையிலும், 1,246 பேர் 10 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலும் நன்கொடை அளித்தனர்.

இரண்டு பக்தர்கள் 1 கோடிக்கும் அதிகமான நன்கொடைகளை வழங்கி இருக்கிறார்கள்.

திருப்பதி கோவில் சாதனை

ஒரே நாளில் 97 கோடி ரூபாய் நன்கொடை என்பது, திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் சாதனையாக பதிவாகி இருக்கிறது.

===========